Sunday, December 11, 2011

ஹஜ் அனுபவங்கள், உங்கள் சிந்தனைக்கு ...

ஏக இறைவன் வல்ல ரப்புல் ஆலமீனின் திருப்பெயரால்  ...
அஸ்ஸலாமு அலைக்கும்...

நம்மில் சிலர் ஹஜ்ஜை பிரைவேட் டிராவல் மூலமோ அல்லது ஹஜ் கமிட்டி மூலமோ செல்வோம்.

இதில் பிரைவேட் டிராவல் மூலம் செல்வோரின் இடையூறை குறிப்பிட விரும்புகிறேன். இன்சா அல்லாஹ் தங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்

* இதில் நான் சென்ற டிராவல்ஸ் பற்றி மட்டும் அல்ல, பொதுவான பிரைவேட்  டிராவல் எடுத்து செல்லும் ஹஜ்ஜில் நடக்கும் சம்பவங்கள் .

- நீங்கள் GroupA ல சென்றாலும், GroupB / C,  ல  சென்றாலும், அவர்கள் ஹஜ் முடியும் வரை குறிப்பிட்ட 5 star or 7 star ஹோட்டலில் தங்க வைக்க மாட்டார்கள். மாறாக அஜிசியா என்ற இடத்தில் (minimum 5 - 8KM from Haram Sheriff) தான் நம்மை தங்க வைப்பார்கள். இந்த விபரத்தை, அவர்களின் notice இல்  இருக்காது. ஆக தாங்கள் தொழுகைக்கு ஹரத்திற்கு செல்ல அதிகம் அதிகம் taxi இல் தான் செல்லவேண்டும். அதற்கு 20 ரியால் முதல் 200ரியால்  வரை  ஒருவருக்கு கேட்பார்கள்.

- 7 ம் நாள் இரவே தங்களை இஹ்ராம் அணிந்து அஜிசியா ரூம் லேயே  தூங்க சொல்வார்கள். மினாவிற்கு செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணி முதல் காலை எந்த நேரத்திற்கும் வரலாம்.
(8 ம் நாள் பஜர் தொழுது விட்டு சூரியம் உதயத்திற்கு  முன் செல்வது நபி வழியாகும், ஆனால் மக்கள் நெருக்கடி காரணமாக இப்பிடி ஒரு ஏற்பாடு செய்கிறார்கள்).

- மினா டெண்டில் 100 பேர் ஒருக்களித்து படுக்க கூடிய இடத்தில் 150 பேரை அடைப்பார்கள். இடம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஹஜ் நிறைவேட்டிட நாம் சகித்து கொள்வோம். ஆனால் அவர்கள் தெரிந்தே கடைசியில் தன் லாபத்திற்காக அதிகமான நபர்களை சேர்கிறார்கள்.

(* மேலும் அதில் A/C வேலை செய்யாது, பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் நிர்வாகம் தங்கி உள்ள டெண்டு மட்டும் நல்ல குளுமையாக இருக்கும் )

 - மினாவில் பஜர் தொழுது விட்டு சூரியம் உதயத்திற்கு முன் செல்வது நபி வழியாகும், ஆனால் மக்கள் நெருக்கடி காரணமாக முதல் நாள் இரவே மினாவிளுருந்து கிளம்பனும் . அதேபோல் மினாவில் இருந்து செல்ல வேண்டிய பஸ் மேலே குறிப்பிட்டது போல் மிக மிக கால தாமதமாகும்.

- அல்ஹம்துலில்லாஹ் அரபாவிர்க்கு பஜருக்கு சில மணித்துளிகள் முன் வந்துவிடலாம்.

- அரபாவில் சூரியன் அடி சாய்ததும் முஜ்தலிபா விற்கு செல்லவேண்டிய பஸ், இரவு 10 - 11 - 12  மணி ஆகலாம். அப்படி கிளம்பினதும் சிறிய தூரம் சென்றதும் பஸ் traffic காரணமாக நின்றுவிடும். பின்பு எப்போது கிளம்பும் என்றால் அடுத்த நாள் ஆகிவிடும். முஜ்தலிபா உள்ள  கடமை நிறைவேறாமல் போய்விடும் .

* இதை அவர்கள், கொஞ்சம் முன்பே கிளம்பலாம் அல்லது, இதன் விபரத்தை எல்லோரிடமும் சொல்லி, அவரவர்கள் நடந்து செல்ல சொல்லலாம். இதனால் முக்கியமான   முஜ்தலிபாவில் தங்கி பஜர் தொழுகை நிரவேட்ட்ற வேண்டிய கடமை தவறி விடுகிறது. பலகீனர்கள் அல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களும் இந்த கடமை முடியாமல் ஹஜ் சென்று வருகிறார்கள்.
பலர் நடக்கும் காட்சி


- பின்பு மினாவிற்கு வந்ததும், சிறிய கற்களை கொண்டு சைத்தாணிற்கு கல் எரிய அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்லவேண்டும் என அடம் பிடிப்பார்கள். பலகீனர்களுக்கு உள்ள சலுகையை நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களையும் அதே போல் செய்ய சொல்வார்கள்.


- அடுத்து குர்பானி : இதில் அவர்கள் நாங்கள் குர்பானி குடுக்கிறோம் என்று குறைந்த விலையில் மினாவிற்கு தொலைவில் சென்று எங்கோ போய் குடுப்பார்கள்.
அல்குரான் 2:196 = அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்.
 
இதில் மினாவில் குடுக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தும், அவர்கள், 8KM தொலைவில் குடுக்கிறார்கள். அதற்கு பதில் சவுதி கோவேர்மென்ட் ஏற்பாடு செய்த பேங்க் மூலம் குடுத்தால் , அவர்கள் நாட்கள் தள்ளி போனாலும் குர்பானி குடுக்கும் இடத்திலேயே குடுப்பார்கள்.

- பின்பு தலை முடியும் இஹ்ரமும் களைந்து விட்டு , "தவாப் al இபாலா " செய்ய வேண்டும். இதை அவர்கள் சொல்ல மாட்டார்கள், நாம் தான் முயற்சி எடுத்து ஹரத்திற்கு செல்ல வேண்டும். பலகீனமானவர்கள் இத்தெய் செய்யாமலே விட்டு விடுகின்றனர் காரணம் நிர்வாகம் சொல்லவும் இல்லை, இவர்கலுக்கும் அதை பற்றிய தகவலும் இல்லை.

- பின்பு மினா டெண்டிர்ற்கு வந்து தங்கி விடவேண்டும்.

- ஹஜ்ஜினுடைய நாட்கள் கழித்து இப்போவாவது ஹரத்திற்கு அருகில் உள்ள ஏற்கனவே குறிப்பிட்ட ஹோட்டலுக்கு அனுப்ப மாட்டார்கள், இன்னும் ஒருநாள் அஜீஜியா வில் தங்க வைப்பார்கள் . ஆகவே, தாங்கள் செல்லும் நாட்களில் அதிகமதிகம் ஹரத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள் குறைந்து விடும். மாறாக டாக்ஸி செலவு கணக்கு பார்க்காதவர்களை தவிர.

ஹஜ் வழிகாட்டியின் வழிகேடு :
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்;

- தாங்கள் ஹஜ் பற்றிய தகவல் இல்லாமல் சென்றால் , அங்கு தங்களை வழி தவற பல வழிகள் உண்டாகும்

- அல்குரான் : ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (2:196)
ஆனால் அவர்கள் இரண்டாம் உம்ராவை நம் நபி சள்ளலாஹு அலைஹிவசள்ளம் பெயரில் செய்ய சொல்வார்கள் .

அல்குரான் 2: 199)பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. 
-  மாறாக அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சொல்லாத சுன்னத்து தொழுகை மினாவிலும் அரபாவிலும் தொழுவார்கள்.
- திக்ரு என்ற பெயரில் "அஹு" , "இல்லலா" சொல்லி தருவார்கள்

இன்னும் தவறான ஹதீசுகளை சொல்லி தருவார்கள். உதாரணம்: நபி இபுராஹீம் (அலை) கோபத்தால் தன் மகனை அறுக்க வேண்டிய கத்தி அருக்காதளால்  கத்தியை தூக்கி எறிந்தார்கள், அருகில் இருந்த மலை இரண்டாக பிளந்தது என்று ..!!!!

Al Quran (As Saffat)
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." (102)
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது (103)
நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம். (104)
"திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். (105)
"நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்." (106)
ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம். (107)

இன்னும் அல்லாஹ் நல்லடியார் இன்று சொன்ன நபி இபுராஹீம் (அலை) அவர்களை கோபக்காரர் போல் சித்தரிப்பது எப்படி சரி ஆகும் ?
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (37:111)

இப்படி நிறைய உண்டு =>
=====

இதில் ஹஜ் committee சிறந்தது அல்லது மற்ற private travels சிறந்தது என்று சொல்லவில்லை, தாங்கள் எதில் சென்றாலும் நன்றாக ஹஜ்ஜினுடைய காரியங்களை நன்கு தெரிந்து விட்டு அதற்கு ஏற்ற உடம்பை தயார் படித்திவிட்டு செல்லுங்கள்.

டிராவல்ஸ் யை குறை சொல்லி ஒன்னும் புரயோஜனமில்லை. காரணம் அவரகளுக்கு அது வியாபாரம், நமக்கு இது நம் வாழ் நாளின் ஒரே ஒரு முறை நடக்கும் அல்லாஹ்வுக்காக உள்ள கடமை மற்றும் இபாதத்.
  
இறுதி கடமை என்பதனால் இறுதி காலத்து கடமை என்று சென்றால், நீங்கள் ஹஜ்ஜை காணத்தான் முடியும் செய்ய முடியாது.
குறைந்தது 25KM நடக்க தங்களை தயார் படித்தி கொள்ளுங்கள் .

அல்லாஹ் ஒருவனே முற்றிலும் அறிந்தவன் ..இதில் குறை இருப்பின் தெரியபடுத்தவும்.

வஸ்ஸலாம்

Sunday, December 4, 2011

25 Duas from the Holy Quran (Arabic - English - Tamil )

                      25 Duas from the Holy Quran
(And when My servants ask thee concerning Me, I am indeed close (to them): I respond to the dua (prayer) of every suppliant when they calleth on Me - Quran 2:186)
என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
 D U A
1. Our Lord! Grant us good in this world and good in the life to come and keep us safe from the torment of the Fire (2:201)

"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
2. Our Lord! Bestow on us endurance and make our foothold sure and give us help against those who reject faith. (2:250)

"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
3. Our Lord! Take us not to task if we forget or fall into error. (2:286)

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!
4. Our Lord! Lay not upon us such a burden as You did lay upon those before us. (2:286)

 எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!
5. Our Lord! Impose not on us that which we have not the strength to bear, grant us forgiveness and have mercy on us. You are our Protector. Help us against those who deny the truth. (2:286)

எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"
6. Our Lord! Let not our hearts deviate from the truth after You have guided us, and bestow upon us mercy from Your grace. Verily You are the Giver of bounties without measure. (3:8)

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)  
7. Our Lord! Forgive us our sins and the lack of moderation in our doings, and make firm our steps and succour us against those who deny the truth. (3:147)

மேலும், "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
8. Our Lord! Whomsoever You shall commit to the Fire, truly You have brought [him] to disgrace, and never will wrongdoers find any helpers (3:192)

"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்;).
9. Our Lord! Behold we have heard a voice calling us unto faith: "Believe in your Lord" and we have believed. (3:193)

"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே!
10. Our Lord! Forgive us our sins and efface our bad deeds and take our souls in the company of the righteous. (3:193)

எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;).
11. Our Lord! And grant us that which you have promised to us by Your messengers and save us from shame on the Day of Judgement. Verily You never fail to fulfill Your promise. (3:194)

எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
12. Our Lord! We have sinned against ourselves, and unless You grant us forgiveness and bestow Your mercy upon us, we shall most certainly be lost! (7:23)

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
13. Our Lord! Place us not among the people who have been guilty of evildoing. (7:47)

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே" என்று கூறுவார்கள்.
14. Our Lord! Lay open the truth between us and our people, for You are the best of all to lay open the truth. (7:89)

"எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்).
15. Our Lord! Pour out on us patience and constancy, and make us die as those who have surrendered themselves unto You. (7:126)

"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.)
16. Our Lord! Make us not a trial for the evildoing folk, and save as by Your mercy from people who deny the truth (10:85-86)

எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள். (85)"

(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்கள்.) (86)
17. Our Lord! You truly know all that we may hide [in our hearts] as well as all that we bring into the open, for nothing whatever, be it on earth or in heaven, remains hidden from Allah (14:38)

"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை."
18. Our Lord! Bestow on us mercy from Your presence and dispose of our affairs for us in the right way. (18:10)

"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்.
19. Our Lord! Grant that our spouses and our offspring be a comfort to our eyes, and give us the grace to lead those who are conscious of You. (25:74)

"எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
20. Our Lord! You embrace all things within Your Grace and Knowledge, forgive those who repent and follow Your path, and ward off from them the punishment of Hell. (40:7)

"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
21. Our Lord! Make them enter the Garden of Eden which You have promised to them, and to the righteous from among their fathers, their wives and their offspring, for verily You are alone the Almighty and the truly Wise. (40:8)

"எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
22. Our Lord! Relieve us of the torment, for we do really believe. (44:12)

"எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்" (எனக் கூறுவர்).
23. Our Lord! Forgive us our sins as well as those of our brethren who proceeded us in faith and let not our hearts entertain any unworthy thoughts or feelings against [any of] those who have believed. Our Lord! You are indeed full of kindness and Most Merciful (59:10)

"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்"
24. Our Lord! In You we have placed our trust, and to You do we turn in repentance, for unto You is the end of all journeys. (60:4)

"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,"
25. Our Lord! Perfect our light for us and forgive us our sins, for verily You have power over all things. (66:8)

"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

Sunday, July 31, 2011

ஹாஜியின் ஏக்கம் by மர்ஹூம் அஜ்மல்கான்


அஸ்ஸலாமு அழைக்கும்,

கீழே உள்ள அனைத்து பதிவுகளும் என் தகப்பனாரால்  "United Economic Forum" என்ற நூலில் வெளியானது 





Tuesday, July 26, 2011

பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் துஆ

*பிறை பார்த்து நோன்பு வையுங்கள்**, பிறை பார்த்து நோன்பை
முடித்துக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)*
*اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال
رشد و خير***
*                                         ***
*பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ*

 
அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் அம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் ரப்பி  வ ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஸ்தின் வ ஹைர்.


அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் கொண்டு த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்அல்லாஹ் தான்! நேர்வழிக்கும் நல்லதற்க்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

Sunday, June 26, 2011

மாநபியின் வின்னுலகப்பயனமும்- மானுடர்கள் பெறவேண்டிய படிப்பினைகளும்!

*
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
*
*(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து
(கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல்
அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை
நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக்
காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்)
செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.[17:1
*


இந்த வசனத்தில் அல்லாஹ் மாநபி [ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை மேற்கோள்
காட்டி, அந்த பயணம் 'நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காக' என்று
சொல்லிக்காட்டுகிறான். நபி[ஸல்] அவர்களின் இந்த பயணம் விரிவான செய்திகளை
அடக்கியது எனவே, அதை சுருக்கமாக பார்த்துவிட்டு இந்த பயணத்தின் மூலம்
முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விரிவாக பார்ப்போம்.

*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் இறையில்லம் கஅபாவில்
இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது
நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம்
கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை
பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என்
இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக்
கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல்
வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி)
ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார்
அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார்.
'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது"
என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?'
என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்!
அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான்
ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்)
மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள். *


**
*பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று
வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?'
என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை
அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு
அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை
மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை)
அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும்
நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள். *
**
*பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று
கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர்
யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து
வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்"
பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று
கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின்
வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. **பிறகு, நான் யூசுஃப்
(அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன்.
அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து)
சொன்னார்கள். *
**
*பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று
கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?'
என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு
ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின்
வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து)
சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம்
உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று
(வாழ்த்து) சொன்னார்கள். *
**

*பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று
கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர்
யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை
அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்"
என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக
நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை)
அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும்
நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார். *
**
*பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று
கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர்
யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை
அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்"
என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல
வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று
(அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு
நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது
அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம்
கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட
அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின்
சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள். *
**
*பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று
வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர்
யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை
அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின்
வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து)
சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம்
உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்"
என்றார்கள். *
**
*பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு
வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர்,
'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம்
வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம்
வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்" என்றார். பிறகு,
(வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு
வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின்
(உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின்
காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன.
(ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ்,
நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம்
அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும்
சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ்
நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்)
தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை)
அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என்
மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு
அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ
இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்)
தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம்
(தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான்
திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான்.
பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை)
முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக
ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல
(நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு
நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க,
'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப்
போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த
எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின்
தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை
அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து
வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து
நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது.* [நூல்;புஹாரி எண் 3207 ]
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் காபாவில் இருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற
விபரங்கள் கூடுதலாக கிடைக்கின்றன.
*எனது விண்ணேற்றப் பயணத்திற்காக) நாட்டுக்கழுதைக்கும் கோவேறுக்கழுதைக்கும்
இடைப்பட்ட உருவத்தில், வெள்ளை நிறமுடைய, பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது
காலைத் தூக்கி ஓர் எட்டு வைக்கும், 'புராக்' எனும் உயரமான ஒரு (மின்னல் வேக)
வாகனம் அளிக்கப் பட்டேன். அதிலேறி நான் (ஜெரூசலேத்திலுள்ள இறையாலயம்) பைத்துல்
மக்திஸ்வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும்
வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டி வைத்து விட்டு, அந்த இறையாலத்திற்குள்
நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு
பாத்திரத்தில் பாலும் (எனக்காகக்) கொண்டு வந்தார். நான் பாலைத்
தேர்ந்தெடுத்தபோது, "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று ஜிப்ரீல்
கூறினார்.* [முஸ்லிம்]
*இந்த பொன்மொழியிலிருந்து அறியவேண்டியவைகள்*;
   1. ஒவ்வொரு வானத்திற்கும் பிரத்தியேகமான காவலர்களை[வானவர்களை] அல்லாஹ்
   நியமித்துள்ளான்.
   2. அல்லாஹ்வால் அழைக்கப்பட்டவர் மட்டுமே வின்னிற்குள் நுழையமுடியும்.
   3. ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை நபி[ஸல்] அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
   4. அல்-பைத்துல் மஃமூர் [பூமியில் புனித பள்ளியாக காஃபா இருப்பதுபோல்]
   வானத்தில் உள்ள புனித பள்ளியாகும். இங்கு வானவர்கள் மட்டுமே தொழுவார்கள்.
   ஒருமுறை தொழும் வானவர்களின் எண்ணிக்கை 70 ,000 பேர் ஆகும். ஒரு முறை அங்கு
   வணங்கியவர்கள் மீண்டும் வரமாட்டார்கள்.
   5. ஒரு முறை தொழும் வானவர் 70 ,000 பேர். அவர்கள் மீண்டும் அங்கு
   வரமாட்டார்கள் எனில், அல்லாஹ் கணக்கிலடங்கா வானவர்களை படைத்திருக்க கூடும்.
*படிப்பினைகள்*;அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஆரம்பமாக ஐம்பது நேர தொழுகையை
கடமையாக்கினான். பின்பு நபி மூஸா[அலை] அவர்களின் அறிவுரையின் பேரில், நபி[ஸல்]
அவர்கள் அல்லாஹ்விடம் கெஞ்சியதன் பயனாக அல்லாஹ் ஐந்து நேரமாக குறைத்ததோடு, ஒரு
நற் செயலுக்கு பத்து மடங்கு கூலியை வழங்குவதாக அறிவித்துவிட்டான். இந்த
அடிப்படையில் நாம் முறையாக, உரிய நேரத்தில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால்
அல்லாஹ் ஐம்பது நேரம் நாம் தொழுத நன்மையை பதிவு செய்வான். இத்தகைய சிறப்பு
வாய்ந்த தொழுகையை இன்று முஸ்லீம் சமுதாயத்தில் பெரும்பாலோர் பாழடித்து
வருவதையும், வெள்ளிக்கிழமை அல்லது பெருநாள் மட்டும் தொழுபவர்களாகவும் இருப்பதை
பார்க்கிறோம். அல்லாஹ் நம்மீது கருணை காட்டிஐம்பதை மாற்றி ஐந்தாக தந்தானே,
அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஐவேளை தொழுபவர்களாகவும்,
சுன்னத்தான-நபிலான தொழுகையை நிறைவேற்றுபவர்ஆகவும் நாம் மாறவேண்டும்.
*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான் (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின்
போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக
ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில்
அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். [நூல்;புஹாரி எண் 3241 ]*
*படிப்பினைகள்; *எழ்மை நிலையில் இருக்கும் நம்மில் சிலர், 'என்ன வாழ்க்கை இது;
அல்லாஹ்வை நாம் அனுதினமும் வணங்கி வரும் நமக்கு ஏன் இந்த கஷ்ட நிலையோ' என்று
அங்கலாய்ப்பதை பார்க்கிறோம். எழ்மைநிலையில் இருப்பவர்கள் வருந்தவேண்டியதில்லை.
ஏனெனில் நிரந்தர சொர்க்கத்தில் அதிகமாக பிரவேசிக்கப்போவது ஏழைகள்தான் என்பதை
புரிந்து கொள்ளவேண்டும்.
பெண்கள் அதிகமாக நரகம் செல்லக்காரணம் என்ன? மற்றொரு நபி மொழி நமக்கு
தெளிவாக்குகிறது.*'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு
நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள்
சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக
இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர்
அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச்
சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக்
கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை
மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக்
கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள்
கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக்
கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள்
பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;
ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு
விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள்
பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக
இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ
ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.* [நூல்;புஹாரி எண் 304 ]
இந்த நபிமொழியில் பெண்கள் நரகம் செல்லும் காரணியாக மூன்று செயல்களை நபி[ஸல்]
அவர்கள் அறிவிக்கிறார்கள் இந்த மூன்று செயல்களும் இருக்கும் பெண்கள் அதை மாற்ற
முன்வரவேண்டும்.
*மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற
போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள்
இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள்
காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ""ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான்
கேட்டேன். ""இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின்
தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861 **
**படிப்பினைகள்;*புறம் பேசுவதை சர்வசாதரனாக செய்து கொண்டிருக்கிறோம். இதில்
விதிவிலக்கானவர்கள் 'மைக்ரோ பாய்ண்ட்'அளவே தேறுவர். இந்த மாபாதக
செயலுக்கும்மறுமையில் கிடைக்கும் தண்டனையைத்தான் மேற்கண்ட நபி மொழி
விளக்குகிறது. இனியேனும் திருந்துவோமாக!
அல்லாஹ் நபி[ஸல்] அவர்களுக்கு 'அல்கவ்ஸர்' எனும் தடாகத்தை மறுமையில்
வழங்குவான். அந்த அல்-கவ்ஸர் பற்றி *இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு)
கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம்
வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை
அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.** நூல்;புஹாரி ]*
*இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தடாகத்தில் நபி[ஸல்] அவர்களின் உம்மத்தினர்
அனைவரும் நீரருந்திவிடமுடியுமா எனில் சிலர் தடுக்கப்படுவார்கள்.*
*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்' எனும்)
என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக்
காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள்.
அப்போது நான் '(இவர்கள்) என் சமுதாயத்தார்' என்பேன். அதற்கு 'உங்களுக்குத்
தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே
திரும்பிச் சென்றார்கள்' என்று கூறப்படும்.[நூல்;புஹாரி எண் 7048 ]*
இந்த பொன்மொழியில் வந்தவழியே திரும்பி சென்றவர்கள் தடாகத்திற்கு நீரருந்த
வரமுடியாது. நபியவர்களின் திருக்கரத்தால் நீரருந்தும் பாக்கியம் அவர்களுக்கு
கிட்டாது. திரும்ப செல்லுதல், என்றால் மதம் மாறுவது மட்டும் என்று பொருளல்ல.
மாறாக இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால், நாம் செய்து கொண்டிருந்த எந்த ஒரு தீய
செயலையும் இஸ்லாத்திற்கு வந்த பின்னும் தொடர்ந்தால் அதுவும் வந்தவழியே
செல்வதாகும். உதாரணத்திற்கு இஸ்லாத்தில் அல்லாஹ்வை தவிர வேறு எவரிடமும்
உதவிதேடக்கூடாது என்பது சட்டம். ஆனால் முஸ்லிம்களில் சிலர் தர்காக்களில்
மண்ணோடு மண்ணாக மக்கிப்போனவர்களிடம் பல்வேறு உதவிகளை தேடுகின்றனர். அதோடு
இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயம் எதுவும் இல்லை. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஒரு
குழந்தை பிறப்பது முதல் அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, முதுமையடைந்து
இறப்பதுவரை ஏன் இறந்த பின்னும் எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதை காணலாம்.
இதுபோன்ற செயல்கள் வந்த வழியே திரும்பி செல்வதாகும். எனவே மார்க்கம் நபி[ஸல்]
அவர்களோடு முற்று பெற்று விட்டது. நபி[ஸல்] அவர்களுக்கு பின்னால் எவர் எதை
சொன்னாலும் அது குர்ஆண்- ஹதீஸுக்கு முரணாக இருந்தால் தூக்கி எறிந்து விட்டு
குர்ஆண்- ஹதீஸை மட்டும் பின்பற்ற அமுல்படுத்த முஸ்லிம்கள் முன்வரவேண்டும்.
அப்போதுதான் தடாகம் நீரும் கிடைக்கும்-தடையின்றி சொர்க்கம் செல்லவும் முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபி[ஸல்] அவர்களின் விண்ணுலக பயணத்தை எந்த
படிப்பினைக்காக ஆக்கினானோ அதை புரிந்து அமல் செய்யக்கூடியவர்களாக நம்மை
ஆக்கியருள்வானாக!

Monday, June 13, 2011

Arabic English translation of 99 names of Allah


1Allah (الله)The Greatest Name
2Ar-Rahman (الرحمن)The All-Compassionate
3Ar-Rahim (الرحيم)The All-Merciful


4Al-Malik (الملك)The Absolute Ruler
5Al-Quddus (القدوس)The Pure One
6As-Salam (السلام)The Source of Peace
7Al-Mu'min (المؤمن)The Inspirer of Faith
8Al-Muhaymin (المهيمن)The Guardian
9Al-Aziz (العزيز)The Victorious
10Al-Jabbar (الجبار)The Compeller
11Al-Mutakabbir (المتكبر)The Greatest
12Al-Khaliq (الخالق)The Creator
13Al-Bari' (البارئ)The Maker of Order


14Al-Musawwir (المصور)The Shaper of Beauty
15Al-Ghaffar (الغفار)The Forgiving
16Al-Qahhar (القهار)The Subduer
17Al-Wahhab (الوهاب)The Giver of All
18Ar-Razzaq (الرزاق)The Sustainer
19Al-Fattah (الفتاح)The Opener
20Al-`Alim (العليم)The Knower of All
21Al-Qabid (القابض)The Constrictor
22Al-Basit (الباسط)The Reliever
23Al-Khafid (الخافض)The Abaser
24Ar-Rafi (الرافع)The Exalter
25Al-Mu'izz (المعز)The Bestower of Honors
26Al-Mudhill (المذل)The Humiliator
27As-Sami (السميع)The Hearer of All
28Al-Basir (البصير)The Seer of All
29Al-Hakam (الحكم)The Judge
30Al-`Adl (العدل)The Just
31Al-Latif (اللطيف)The Subtle One
32Al-Khabir (الخبير)The All-Aware
33Al-Halim (الحليم)The Forbearing
34Al-Azim (العظيم)The Magnificent
35Al-Ghafur (الغفور)The Forgiver and Hider of Faults
36Ash-Shakur (الشكور)The Rewarder of Thankfulness
37Al-Ali (العلى)The Highest
38Al-Kabir (الكبير)The Greatest
39Al-Hafiz (الحفيظ)The Preserver
40Al-Muqit (المقيت)The Nourisher
41Al-Hasib (الحسيب)The Accounter
42Al-Jalil (الجليل)The Mighty
43Al-Karim (الكريم)The Generous
44Ar-Raqib (الرقيب)The Watchful One
45Al-Mujib (المجيب)The Responder to Prayer
46Al-Wasi (الواسع)The All-Comprehending
47Al-Hakim (الحكيم)The Perfectly Wise
48Al-Wadud (الودود)The Loving One
49Al-Majid (المجيد)The Majestic One
50Al-Ba'ith (الباعث)The Resurrector
51Ash-Shahid (الشهيد)The Witness
52Al-Haqq (الحق)The Truth
53Al-Wakil (الوكيل)The Trustee
54Al-Qawiyy (القوى)The Possessor of All Strength
55Al-Matin (المتين)The Forceful One
56Al-Waliyy (الولى)The Governor
57Al-Hamid (الحميد)The Praised One
58Al-Muhsi (المحصى)The Appraiser
59Al-Mubdi' (المبدئ)The Originator
60Al-Mu'id (المعيد)The Restorer
61Al-Muhyi (المحيى)The Giver of Life
62Al-Mumit (المميت)The Taker of Life
63Al-Hayy (الحي)The Ever Living One
64Al-Qayyum (القيوم)The Self-Existing One
65Al-Wajid (الواجد)The Finder
66Al-Majid (الماجد)The Glorious
67Al-Wahid (الواحد)The One, the All Inclusive, The Indivisible
68As-Samad (الصمد)The Satisfier of All Needs
69Al-Qadir (القادر)The All Powerful
70Al-Muqtadir (المقتدر)The Creator of All Power
71Al-Muqaddim (المقدم)The Expediter
72Al-Mu'akhkhir (المؤخر)The Delayer
73Al-Awwal (الأول)The First
74Al-Akhir (الأخر)The Last
75Az-Zahir (الظاهر)The Manifest One
76Al-Batin (الباطن)The Hidden One
77Al-Wali (الوالي)The Protecting Friend
78Al-Muta'ali (المتعالي)The Supreme One
79Al-Barr (البر)The Doer of Good
80At-Tawwab (التواب)The Guide to Repentance
81Al-Muntaqim (المنتقم)The Avenger
82Al-'Afuww (العفو)The Forgiver
83Ar-Ra'uf (الرؤوف)The Clement
84Malik-al-Mulk (مالك الملك)The Owner of All
85Dhu-al-Jalal wa-al-Ikram (ذو الجلال و الإكرام)The Lord of Majesty and Bounty
86Al-Muqsit (المقسط)The Equitable One
87Al-Jami' (الجامع)The Gatherer
88Al-Ghani (الغنى)The Rich One
89Al-Mughni (المغنى)The Enricher
90Al-Mani'(المانع)The Preventer of Harm
91Ad-Darr (الضار)The Creator of The Harmful
92An-Nafi' (النافع)The Creator of Good
93An-Nur (النور)The Light
94Al-Hadi (الهادي)The Guide
95Al-Badi (البديع)The Originator
96Al-Baqi (الباقي)The Everlasting One
97Al-Warith (الوارث)The Inheritor of All
98Ar-Rashid (الرشيد)The Righteous Teacher
99As-Sabur (الصبور)The Patient One

Thursday, May 19, 2011

தாடி ஓர் ஆய்வு

தாடி ஓர் ஆய்வு
சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் ஏகத்துவம் இதழுக்காக எழுதிய இந்த ஆய்வை நேயர்கள்
பயனடைவதற்காக வெளியிடுகிறோம்.
ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால்
தாடி வைப்பது நபிவழி என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்..
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن
ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا
الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட
நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி5892
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء
بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله
صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு
வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 435
மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை
மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு
வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.
ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு
வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப
நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர்
அவர்களையேச் சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் 3512
எனவே தாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது.
இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை.
நமது முயற்சியில்லாம் தானாக வளரும் தாடியை அகற்றாமல் இருந்தாலே சுன்னத்தை
நிறைவேற்றிய நன்மை நமக்கு கிடைக்கின்றது.
அது மட்டுமின்றி தாடியைப் பொறுத்த வரை அது நமது உடலில் ஒரு அங்கமாக
இருக்கின்றது. நமது வாழ்நாள் முழுவதும் இந்த சுன்னத்தைத் தொடர்ந்து
நிறைவேற்றும் பாக்கியம் இதன் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. எனவே நாம்
ஒவ்வொருவரும் தாடி வைக்க வேண்டும்.
 தாடியை மழிப்பதும் ஒட்ட நறுக்குவதும்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இணை வைப்பாளர்கள் அதாவது மஜூசிகள் (நெருப்பு
வணங்கிகள்) தங்களது தாடிகளை மழித்து வந்தனர். இச்செயலை நபி (ஸல்) அவர்கள் தடை
செய்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
صحيح ابن حبان - (ج 12 / ص 289)
5476 - أخبرنا الحسين بن محمد بن أبي معشر بحران قال : حدثنا محمد بن معدان
الحراني قال : حدثنا الحسن بن محمد بن أعين قال : حدثنا معقل بن عبيد الله عن
ميمون بن مهران عن ابن عمر قال : ذكر لرسول الله صلى الله عليه و سلم المجوس
فقال : ( إنهم يوفون سبالهم ويحلقون لحاهم فخالفوهم ) فكان ابن عمر يجز سباله
كما تجز الشاة أو البعير
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மஜூசிகளைப் பற்றி கூறப்பட்ட போது மஜூசிகள்
தங்களது மீசைகளை அதிகமாக வைக்கிறார்கள். தாடிகளை மழிக்கிறார்கள். எனவே
அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேதமுடையவர்கள் அதாவது யூதர்களும் கிரிஸ்தவர்களும்
தங்களது தாடிகளை (மழிக்காமல்) ஒட்ட வெட்டி வந்தனர். இவர்கள் தாடியை விட மீசையை
அதிகமாக வளர்த்தார்கள். இதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
حدثنا زيد بن يحيى حدثنا عبد الله بن العلاء بن زبر حدثني القاسم قال سمعت أبا
أمامة يقول خرج رسول الله صلى الله عليه وسلم على مشيخة من الأنصار بيض لحاهم
فقال يا معشر الأنصار حمروا وصفروا وخالفوا أهل الكتاب قال فقلت يا رسول الله
إن أهل الكتاب يتسرولون ولا يأتزرون فقال رسول الله صلى الله عليه وسلم تسرولوا
وائتزروا وخالفوا أهل الكتاب قال فقلت يا رسول الله إن أهل الكتاب يتخففون ولا
ينتعلون قال فقال النبي صلى الله عليه وسلم فتخففوا وانتعلوا وخالفوا أهل
الكتاب قال فقلنا يا رسول الله إن أهل الكتاب يقصون عثانينهم ويوفرون سبالهم
قال فقال النبي صلى الله عليه وسلم قصوا سبالكم ووفروا عثانينكم وخالفوا أهل
الكتاب
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து
சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள்
அன்சாரிக் கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள்
நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று
கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள்.
வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள்.
வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே
வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று நான் கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள்.
வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே
வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர
விடுகிறார்கள் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது
மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள்.
வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது 21252
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن
ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا
الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளர விடுங்கள். மீசையை ஒட்ட
நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 5892
இணை வைப்பாளர்கள் தங்களது மீசையை வளரவிட்டு தாடியை ஒட்ட நறுக்கி வந்தார்கள்
என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
தாடிகளை வளர விட வேண்டும். மீசையை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட
கட்டளை. இவ்வாறு செய்தால் தான் நாம் இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்ய முடியும்.
எனவே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற
காரணத்திற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாடியை மழிப்பதற்கும் ஒட்ட வெட்டுவதற்கும் இடையில் வித்தியாசம் இருந்தாலும்
இவ்விரு செயல்களால் தாடி அகற்றப்பட்டு தாடி வைக்கவில்லை என்ற தோற்றமே
ஏற்படுகிறது. எனவே மார்க்கம் இவ்விரு செயல்களையும் தடை செய்கிறது.
 தாடியை வெட்டுவதற்குத் தடையில்லை
நபி (ஸல்) அவர்கள் தாடியை மழிப்பதையும் அதை ஒட்ட வெட்டுவதை மட்டுமே தடை
செய்துள்ளார்கள். தாடியை வெட்டவே கூடாது என்று தடை விதிக்கவில்லை.
ஒருவர் தாடியை ஒட்ட வெட்டமால் சிறிது நீளமாக விட்டு வெட்டினால் அதை மார்க்கம்
தடை செய்யவில்லை.
ஆனால் இன்றைக்கு இலங்கையைச் சார்ந்த சில அறிஞர்கள் தாடியை வெட்டவே கூடாது என்று
கூறி வருகின்றனர். சில ஹதீஸ்களைத் தவறாகப் புரிந்து கொண்டே இவர்கள் இவ்வாறு
கூறுகின்றனர்.
5893حَدَّثَنِي مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدَةُ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ
بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْهَكُوا
الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى رواه البخاري
382حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ
عُمَرَ بْنِ مُحَمَّدٍ حَدَّثَنَا نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِفُوا الْمُشْرِكِينَ
أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى رواه مسلم
5892حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ
حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا
الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ
عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ
أَخَذَهُ رواه البخاري
383حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ
الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ مَوْلَى الْحُرَقَةِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
جُزُّوا الشَّوَارِبَ وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை நன்கு ஒட்டக்
கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 5893
மேற்கண்ட ஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில்
أَعْفُواஅஉஃபூ என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. சில அறிவிப்புகளில்
أَوْفُواஅவ்ஃபூ,
وَفِّرُواவஃப்பிரூ மற்றும் أَرْخُواஅர்கூ ஆகிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
ஹதீஸில் கூறப்பட்டுள்ள அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய
வார்த்தைகளுக்கு தாடியை வெட்டவே கூடாது என அகராதியில் பொருள் இருப்பதாக தாடியை
வெட்டக் கூடாது என்று கூறுவோர் வாதிடுகிறார்கள்.
 மீசையைக் குறைப்பது போன்று தாடியைக் குறைக்கக் கூடாது
இவர்கள் கூறுவது போல் இச்சொற்களுக்கு இந்த அர்த்தம் இருப்பதாக எந்த அரபி அகராதி
நூலும் கூறவில்லை. மாறாக தாடியை அதிகமாக வைக்க வேண்டும். மீசையைக் குறைப்பது
போன்று குறைத்து விடக் கூடாது என்றே லிசானுல் அரப் எனும் அரபு அகராதியில்
கூறப்பட்டுள்ளது.
لسان العرب - (ج 15 / ص 72)
وفي الحديث أَنه صلى الله عليه وسلم أَمَرَ بإعْفاء اللِّحَى هو أَن يُوفَّر
شَعَرُها ويُكَثَّر ولا يُقَصَر كالشَّوارِبِ
நபி (ஸல்) அவர்கள் தாடியை இஃபாச் செய்யுமாறு உத்தரவிட்டதாக ஹதீஸில் உள்ளது.
இஃபா என்றால் தாடியை அதிகமாக வைப்பதும் மீசையை குறைப்பதைப் போன்று குறைக்காமல்
இருப்பதாகும்.
லிசானுல் அரப் பாகம் : 15 பக்கம் : 72
அவுஃபூ என்ற சொல்லுக்கு தாடியை அறவே வெட்டக் கூடாது என்பது பொருள் இல்லை. மாறாக
மீசையை ஒட்டக் கத்தரிப்பது போல் கத்தரிக்கக் கூடாது என்பதே பொருள் என்று
லிஸானுல் அரப் ஆசிரியர் பொருள் கொள்கிறார்.
மீசையை ஒட்ட வெட்டுவதைப் போன்று தாடியை ஒட்ட வெட்டக் கூடாது. இதை விடவும்
கூடுதலாக தாடியை வைக்க வேண்டும் என்றே நாமும் அகராதியின் பொருளுக்கு உட்பட்டு
கூறுகிறோம்.
வளர விடுங்கள் என்ற சொல்லுக்கு சிறிதளவு கூட வெட்டக் கூடாது என்பது பொருளா?
அல்லது ஒட்டக் கத்தரிக்காத அளவுக்கு இருந்தால் போதும் என்பது பொருளா? இதை வேறு
நபிமொழிகளில் இருந்தும் நாம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் (வளர விடுங்கள் என்ற அர்த்தத்தில்) தாடி தொடர்பான ஹதீஸ்களில்
கூறப்பட்டுள்ள சொற்கள் வேறு சில ஹதீஸ்களில் வெட்டப்பட்ட தலை முடி விஷயத்திலும்
கூறப்பட்டிருக்கின்றது.
4191حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ هِشَامٍ أَبُو عَبْدِ اللَّهِ حَدَّثَنَا
هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي
لَيْلَى عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ وَنَحْنُ مُحْرِمُونَ وَقَدْ
حَصَرَنَا الْمُشْرِكُونَ قَالَ وَكَانَتْ لِي وَفْرَة رواه البخاري
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள்
தடுத்து விட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது.
புகாரி 4191
மேற்கண்ட ஹதீஸில் நிறைய தலைமுடி என்று பொருள் செய்துள்ள இடத்தில் வஃப்ரத் என்ற
வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடி விஷயத்தில் கூறப்பட்ட வஃப்பிரூ என்ற
சொல்லும் வஃப்ரத் என்ற இச்சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை.
கஅப் (ரலி) அவர்களுக்கு நிறைய தலைமுடி இருந்தது எனக் கூறப்பட்டிருப்பதால் கஅப்
(ரலி) அவர்கள் தலைமுடியை வெட்டவே இல்லை என்று விளங்க மாட்டோம். தாடி விஷயத்தில்
இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தாடியை வெட்டவே கூடாது என்று
விளங்குவது இச்சொல்லின் அகராதிப் பொருளுக்கு எதிரானதாகும்.
481 و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ قَالَ
حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ
عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى
تَكُونَ كَالْوَفْرَةِ رواه مسلم
அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை
முடியிலிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.
முஸ்லிம் 533
மேற்கண்ட ஹதீஸிலும் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. காதின் சோனை
வரை இருக்கும் அளவுக்கு கத்தரிக்கப்பட்ட முடிக்கு இவ்வார்தை
பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதிலிருந்து இந்த வார்த்தைக்கு முடியை வெட்டவே
கூடாது என்ற பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பது தெளிவாகிறது.
அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَهْلَ الْكِتَابِ يَقُصُّونَ
عَثَانِينَهُمْ وَيُوَفِّرُونَ سِبَالَهُمْ قَالَ فَقَالَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُصُّوا سِبَالَكُمْ وَوَفِّرُوا عَثَانِينَكُمْ
وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ رواه أحمد
நாங்கள் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக்
கொள்கிறார்கள் மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள்.
வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது 21252
மேற்கண்ட ஹதீஸில் வேதமுடையவர்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று பொருள்
செய்துள்ள இடத்தில் َيُوَفِّرُونَயுவஃப்பிரூன என்ற வார்த்தை
பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடியை வளர விடுங்கள் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட அதே
சொல் தான் இது. மீசைகளை வளர விடுகிறார்கள் என்ற மேற்கண்ட சொல்லுக்கு நாம்
எவ்வாறு பொருள் கொள்வோம்? வேதமுடையவர்கள் தங்களது மீசையை வெட்டாமல்
இருந்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். ஒட்ட நறுக்காமல் கூடுதலாக
வைத்திருந்தார்கள் என்றே புரிந்து கொள்வோம். தாடியை வளர விடுங்கள் என்பதையும்
இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தாடி தொடர்பான ஹதீஸில் வளர விடுங்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபூ
என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபா என்ற வார்த்தை ஹதீஸில் நபி
(ஸல்) அவர்களின் தலைமுடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபூ என்ற
சொல்லும் அவ்ஃபா என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை. இதைப்
பின்வரும் ஹதீஸிலிருந்து புரியலாம்.
252 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ
آدَمَ قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ حَدَّثَنَا أَبُو
جَعْفَرٍ أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ هُوَ وَأَبُوهُ
وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنْ الْغُسْلِ فَقَالَ يَكْفِيكَ صَاعٌ فَقَالَ
رَجُلٌ مَا يَكْفِينِي فَقَالَ جَابِرٌ كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ
شَعَرًا وَخَيْرٌ مِنْكَ ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ رواه البخاري
அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின்
ஹுசைன்) அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம்
குளியல் பற்றிக் கேட்டோம். ஒரு ஸாஉத் தண்ணீர் போதும் என்று ஜாபிர் (ரலி)
அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர்,அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார்.
அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன்னை விட அதிக முடியுள்ளவரும் உன்னை விடச்
சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக
இருந்தது எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை
தாங்கித் தொழுவித்தார்கள்.
புகாரி 252
அதிக முடியுள்ளவர் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபா என்ற அரபுச் சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்ற
பொருள் இருக்குமேயானால் நபி (ஸல்) அவர்கள் தலைமுடியை வெட்டியதே இல்லை என்ற
தவறான கருத்து ஏற்படும்.
ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வெட்டியதற்கு ஆதாரங்கள் உள்ளன.
எனவே இவ்வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்று பொருள் இருப்பதாக
வாதிடுவது தவறு என்பதைச் சந்தேகமற உணரலாம்.
இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் நபிமொழிக்கு எதிரானதா?
அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ ஆகிய வார்த்தைகளைக் கொண்டு தாடியை வளர விடுங்கள் என்ற
கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்களை இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். இந்த
ஹதீஸை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்களே தாடியை வெட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளர விடுங்கள். மீசையை ஒட்ட
நறுக்குங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப்
பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து)
எடுத்து விடுவார்கள்.
புகாரி 5892
இப்னு உமர் (ரலி) அவர்கள் தாடியை வெட்டிய தகவல் தனியான செய்தி அல்ல. மாறாக நபி
(ஸல்) அவர்களின் சொல்லுடன் இதுவும் இணைத்து அறிவிக்கப்படுகின்றது.
இப்னு உமர் (ரலி) அவர்களைப் போல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் முஹம்மது பின்
கஅப் (ரலி) அவர்களும் தாடியை வெட்டலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
இதையெல்லாம் நாம் இங்கே எடுத்துக் காட்டாமல் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை
மட்டும் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை நாம் ஆதாரமாக இங்கே குறிப்பிடவில்லை.
ஒருவரின் சொல்லையும் செயலையும் முரண்பாடில்லாமல் விளங்கிக் கொள்ள
வாய்ப்பிருக்கின்ற போது அவ்விரண்டிற்கும் இடையே முரண்பாடு கற்பிக்கக் கூடாது
என்பதே நமது வாதம்.
தாடியை வெட்டவே கூடாது என்று ஹதீஸ் கூறுகிறது என வாதிடுபவர்கள் இப்னு உமர்
(ரலி) அவர்கள் தமது தாடியை வெட்டிய செயல் இந்த ஹதீஸிற்கு எதிரானது என்றும்
தவறானது என்றும் கூறுகிறார்கள்.
தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை ஹதீஸ் தரவில்லை என்பதை முன்பே நாம்
நிரூபித்து விட்டோம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது
தாடியை வெட்டியிருப்பது நமது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்றி நன்கறிந்தவராக
இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். இந்த அடிப்படையில்
பார்த்தாலும் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் தாடியை வெட்டுவது தவறில்லை என்ற
நமது கருத்தை உறுதிபடுத்துகிறது.
குறிப்பாக இப்னு உமர் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை நபிமொழியை ஜானுக்கு ஜான்
கடைப்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இப்படிப்பட்ட ஒரு நபித்தோழரின்
அறிவிப்புக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடைக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.
 சிக்கல்களை உருவாக்கும் கருத்து
தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன.
சிலருக்கு தாடி எல்லையில்லாமல் மிக நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
இவர்கள் என்ன செய்வது? என்று கேட்டால் மாற்றுக் கருத்தில் இருப்பவர்களிடம்
முறையான எந்தப் பதிலும் இல்லை.
மேலும் தாடியைப் பொறுத்த வரை அது ஒரே அளவில் சீராக வளருவதில்லை. ஓரிடத்தில்
அதிகமாகவும் ஓரிடத்தில் குறைவாகவும் சில முடிகள் நீளமாகவும் சில முடிகள் நீளம்
குறைவாகவும் வளருகின்றன.
தாடியை வெட்டக் கூடாது என்று கூறினால் அலங்கோலமாக இருக்கும் தாடியைச் சரி செய்ய
முடியாது. நமது தோற்றத்தை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறும்
ஒழுங்கு முறையை மீறும் நிலை தான் இதனால் ஏற்படும்.
 பொருத்தமற்ற ஆதாரங்கள்
தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை முகவை அப்பாஸ் என்பவரும் தற்போது பரப்பிக்
கொண்டு வருகிறார். இவர் அரபு மூலத்தை அறிந்தவர் இல்லை. மற்றவர்கள் எழுதியதை
நம்பி எதையாவது எழுதுபவர். இதனால் இவரது கருத்து அறிவு சார்ந்ததாக
இருக்கவில்லை.
இது தொடர்பாக இவர் எழுதிய கட்டுரையில் இவர் ஆதாரமாகக் கருதும் வசனத்தையும் சில
ஹதீஸ்களையும் குறிப்பிட்டிருந்தார்.
விபரம் உள்ளவர்கள் இவரது கட்டுரையைப் பார்த்த உடனே இவரது கருத்துக்கும் இவர்
எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை என்பதைத்
தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.
தாடியை வெட்டவே கூடாது என்பது இவரது நிலைபாடு. இந்த நிலைபாட்டிற்கு ஆதாரம்
காட்டுவதாக இருந்தால் தாடியை வெட்டக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை
விதித்தாக ஒரு ஹதீஸையாவது இவர் கூறியிருக்க வேண்டும். இந்தக் கருத்துப்பட ஒரு
ஆதாரத்தையும் அவர் சுட்டிக் காட்டவில்லை.
மார்க்கத்தில் ஒரு விஷயம் தடுக்கப்பட்டிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை
செய்யாமல் இருக்க மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثنا إسماعيل حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة عن النبي صلى
الله عليه وسلم قال دعوني ما تركتكم إنما هلك من كان قبلكم بسؤالهم واختلافهم
على أنبيائهم فإذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما
استطعتم
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய
முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு
விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்
தூதர்கடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்
தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து
நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான்
கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 7288
ஒரு விஷயத்தை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதை நபி (ஸல்) தடுத்திருக்க
வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. எனவே தாடியை வெட்டவே கூடாது என்றால்
இதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதைத்
தடுத்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.
நபி (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடுக்காமல் இருக்கும் போது முகவை அப்பாஸ் அதைத் தடை
செய்தால் ஈமான் உள்ள யாரும் இத்தடையை ஏற்க மாட்டார்கள். ஏற்க முடியாது.
மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறிய செய்தியை சுட்டிக்காட்டி பின்வருமாறு தன் வாதத்தை வைக்கிறார்.
இந்தப் பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச்
சொல்கிறார்கள். மற்றொன்றை வளரவிடச் சொல்கிறார்கள். எனில் தாடியில் கை வைக்கக்
கூடாது என்பது தெளிவு.
ஹதீஸில் உள்ளவாறு விளங்காமல் தன் மனோ இச்சையின் அடிப்படையில் விளங்கியதால் இவர்
தானும் குழம்பி மற்ற மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கிறார்.
ஹதீஸில் கூறப்பட்ட வாசகத்தையும் இவர் ஹதீஸிற்கு கூறிய தவறான விளக்கத்தையும்
நன்கு கவனித்தால் இவர் எங்கே தவறு செய்கிறார் என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள் எனக் கூறி ஹதீஸில் இல்லாத
கருத்தை சொருகப் பார்க்கிறார்.
மீசையை நறுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. மீசையை நன்கு
ஒட்ட நறுக்க வேண்டும் என்றே உத்தரவிட்டார்கள்.
இந்த உத்தரவுடன் தாடியை வளர விடுங்கள் என்ற உத்தரவும் இணைத்து கூறப்படுகிறது.
அப்படியானால் மீசையை ஒட்ட நறுக்குவதைப் போன்று தாடியை ஒட்ட நறுக்கி விடாதீர்கள்
என்ற தடையைத் தான் ஹதீஸ் கூறுகிறதே தவிர இவர் கூறுவது போல் தாடியை வெட்டவே
கூடாது என்ற தடையை ஹதீஸ் பிறப்பிக்கவே இல்லை.
எனவே தாடியில் கை வைக்கக் கூடாது என்று இவர் தன் மனோ இச்சையின் அடிப்படையில்
தான் கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
அடுத்து இவர் தனது வாதத்திற்கு சில விஷயங்களை ஆதாரமாக முன்வைக்கிறார். ஹாரூன்
(அலை) அவர்களின் தாடி பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. நபி (ஸல்)
அவர்களின் தாடி பிடிக்கும் அளவிற்குப் பெரிதாக இருந்தது. மழை நீர் அத்தாடியில்
வழிந்தோடும் அளவிற்கு அது அமைந்திருந்தது. ஓதும் போது அசையும் அளவிற்குப்
பெரிதாக இருந்தது. நபித்தோழர்களின் தாடியும் பெரிதாக இருந்தது. இவ்வாறு கூறி
தாடியை வெட்டக் கூடாது என்று வாதிடுகிறார்.
தாடியில் கை வைக்கக் கூடாது என்பது இவரது வாதம். இவர் சுட்டிக் காட்டிய
ஆதாரங்களில் ஏதாவது ஒன்றிலாவது தாடியை வெட்டக் கூடாது என்ற கருத்து
அடங்கியிருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.
இவர்கள் குறிப்பிட்ட நபர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக
வைத்திருப்பதால் இவர்கள் யாரும் தாடியை வெட்டவே இல்லை என்று எப்படிக் கூற
முடியும்? இவர்கள் தாடியை வெட்டினாலும் அது பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து
விடுமே? எனவே இந்த ஆதாரங்களை வைத்து தாடியை வெட்டக் கூடாது என்று இவர் கூறுவது
அறிவுடமையல்ல.
ஒரு பேச்சிற்கு இவர் குறிப்பிட்ட ஹாரூன் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள்
நபித்தோழர்கள் அயோக்கியன் அபூ ஜஹ்ல் ஆகியோர் தாடியை வெட்டியதே இல்லை என்று
வைத்துக் கொண்டாலும் அப்போதாவது தாடியை வெட்டக் கூடாது என்று இதிலிருந்து
சட்டம் எடுக்க முடியுமா? என்றால் அதுவும் முடியாது.
தாடியை வெட்டித் தான் ஆக வேண்டும்; பெரிதாக வைக்கக் கூடாது. தாடியைப்
பிடிக்கும் அளவிற்கு வைக்கக் கூடாது என்று நாம் கூறவில்லை. இவையெல்லாம் கூடாது
என்று நாம் கூறினாலே மேற்கண்ட ஆதாரங்களை காட்டி நமது நிலைபாடு தவறு என்று கூற
முடியும்.
ஒருவர் தாடியை வெட்டாமல் இருப்பதும் அதைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக
வளர்ப்பதும் அவரவரது விருப்பம். இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு
என்றே நாம் கூறுகிறோம்.
எனவே இவர் சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் எதுவும் நமது நிலைபாட்டிற்கு எதிரானைவை
அல்ல. மாறாக தாடியை இவ்வாறெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்ற நமது நிலைபாட்டிற்கு
இவை சான்றுகளாக உள்ளன.
ஹதீஸ்களிலிருந்து எவ்வாறு சட்டம் எடுக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை இவர்
அறியாத காரணத்தினால் தன் வாதத்திற்கு சம்பந்தமில்லாத செய்திகளை எல்லாம்
கூறியுள்ளார்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒன்றைத் தடை செய்துள்ளார்கள் என்றால் அது மட்டும்
தடை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றைச் செய்கிறார்கள்
என்றால் அது மட்டும் தான் அனுமதி என்று விளங்கக் கூடாது. அனுமதிக்கப் பட்ட பல
காரியங்களில் ஒன்றை அவர்கள் செய்துள்ளார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் ஒருவர் இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்தது மட்டும் தான்
அனுமதிக்கப்பட்டது. மற்றனைத்தும் தடுக்கப்பட்டது என்று கூறினால் அவரது நிலைபாடு
தவறு என்று கூறுவோம்.
ஏனென்றால் எது தடை செய்யப்பட்டது என்பதை நபி (ஸல்) அவர்களின் கட்டளை மூலமே அறிய
முடியும். எது அனுமதிக்கப்பட்டது என்பதை அவர்களின் உத்தரவின் மூலமும் அவர்களின்
செயலின் மூலமாகவும் அறிய முடியும். நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச்
செய்திருப்பதை மட்டும் வைத்து மற்றனைத்தும் தடை செய்யப்பட்டது என்று முடிவு
செய்யக் கூடாது.
உதாரணமாக வேட்டியைத் தரையில் இழுபடாமல் கரண்டைக் கால் வரை உடுத்திக் கொள்வதற்கு
மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன் கெண்டைக்கால்
தெரியும் அளவிற்கு கீழாடையை உயர்த்தி அணிந்ததாக திர்மிதியில் இடம்பெற்ற 181 வது
ஹதீஸ் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு ஆடை உடுத்தியிருப்பதால்
இவ்வாறு தான் ஆடை உடுத்த வேண்டும் என்று நாம் கூற மாட்டோம். கரண்டை வரை ஆடை
உடுத்திக் கொள்வதை ஹதீஸ்கள் அனுமதிப்பதால் கரண்டை வரை உடுத்தலாம். நபி (ஸல்)
அவர்கள் உடுத்தியது போல் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு உயர்த்தியும்
உடுத்தலாம் என்றே கூறுவோம்.
மேலும் காவி நிற ஆடையை ஆண்கள் உடுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை
செய்துள்ளார்கள். எனவே மற்ற நிற ஆடைகள் அனுமதிக்கப்பட்டவை என்பதை நாம்
இதிலிருந்து அறிந்து கொள்வோம்.
நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இப்போது நபி
(ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணியாத காரணத்தால் அந்த நிற ஆடையை நாமும் அணியக்
கூடாது என்று கூற மாட்டோம்.
இதேப் போன்று தான் தாடி விஷயத்திலும் நாம் கூறுகிறோம். அதாவது தாடியை ஒட்ட
வெட்டக் கூடாது என்றே நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். வெட்டுவதை அவர்கள்
தடுக்கவில்லை. எனவே ஒட்ட நறுக்காமல் கூடுதலாக தாடியை வைத்து வெட்டினால் அதை நபி
(ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. அது அனுமதிக்கப்பட்டது தான்.
நபி (ஸல்) அவர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருக்கிறார்கள்
என்றால் இது அவர்களின் விருப்பம். இது போன்று நாமும் வைத்துக் கொள்ளலாம்.
இப்படித் தான் வைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை என்பதால்
இவ்வாறு வைக்க வேண்டும் என்று நாமும் கூற மாட்டோம்.
இதை முகவை அப்பாஸ் விளங்காத காரணத்தினால் தாடியைப் பிடிக்கும் அளவுக்கு
பெரிதாகத் தான் வைக்க வேண்டும் என்று ஹதீஸில் கூறப்படாத உத்தரவை சுயமாகக்
கூறிவருகிறார்.
 தலை முடி சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகுமா?
தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறு பகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை
நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடை
செய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாகச் சிரைத்து விடுங்கள். (முடியை வைக்க
நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நஸயீ 4962
தாடி தொடர்பான சட்டத்தை மக்களுக்கு நாம் விளக்கும் போது மேற்கண்ட ஹதீஸை நாம்
குறிப்பிடுவதுண்டு.
மேற்கண்ட ஹதீஸில் தலை முடி தொடர்பாகத் தானே பேசப்படுகிறது. இதில் தாடியைப்
பற்றி பேசப்படவில்லையே? எனவே தாடியை வெட்டலாம் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக
முடியும்? என்று முகவை அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது இக்கேள்வி அறியாமையின் வெளிப்பாடாக இருக்கிறது. மேற்கண்ட ஹதீஸை நாம்
எதற்கு சுட்டிக் காட்டினோம் என்பதை இவர் விளங்காத காரணத்தால் இக்கேள்வியைக்
கேட்டுள்ளார்.
மேற்கண்ட ஹதீஸை மட்டும் வைத்து தாடியை வெட்டலாம் என்று நாம் கூறவில்லை. அவ்வாறு
யாராலும் கூற முடியாது.
மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள் என்பதே தாடி தொடர்பான
ஹதீஸாகும். இந்த ஹதீஸிலிருந்தே தாடியை வெட்டலாம் என்று நாம் சட்டம் கூறுகிறோம்.
இவர் கூறுவது போல் தலை முடி தொடர்பான ஹதீஸிலிருந்து அல்ல.
மேற்கண்ட தலை முடி தொடர்பான ஹதீஸில் தலை முடியை முழுமையாக விடுங்கள்! அல்லது
முழுமையாக சிரையுங்கள் என்று கூறப்படுகிறது. முழுமையாக விடுங்கள் என்றால் தலை
முடியை அறவே வெட்டக் கூடாது என்று நாம் புரிந்து கொள்வதில்லை. சில இடங்களில்
சிறைத்து சில இடங்களில் சிறைக்காமல் விடக் கூடாது என்று புரிந்து கொள்கிறோம்.
தலை முடி தொடர்பான ஹதீஸை எப்படி நாம் புரிந்து கொள்கிறோமோ அப்படித்தான் தாடியை
வளர விடுங்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சிறைக்காமல் விட
வேண்டும். இதற்காகத் தான் தலை முடி பற்றிய ஹதீஸை நாம் குறிப்பிட்டோம்.
இந்த அடிப்படையயை விளக்குவதற்காகவே தலை முடி தொடர்பான செய்தியை நாம்
குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் தலைமுடியை முழுமையாக விட்டுவிடுங்கள் என்று
கூறப்பட்டுள்ளது. முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற கட்டளையை மட்டும் கவனத்தில்
கொண்டு தலைமுடியை வெட்டவே கூடாது என்று நாம் கூற மாட்டோம். ஏனென்றால் தலைமுடியை
வெட்டுவதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.
இக்கட்டளை எந்த காரணத்திற்காக பிறப்பிக்கப்பட்டது. எந்த சூழ்நிலையில்
கூறப்பட்டது என்று பார்ப்போம். மழித்தால் முழுமையாக மழிக்க வேண்டும். வைத்தால்
முழுமையாக வைக்க வேண்டும் என்ற கருத்திலே முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற
வாசகம் கூறப்பட்டுள்ளது.
இதை புரிந்து கொள்வதைப் போன்றே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையையும்
புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தாடியை ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைக்க
வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் பொருள்.
 தடுமாற்றங்கள்
தாடியை வெட்டவே கூடாது என்ற நிலைபாட்டின் காரணத்தால் இவரிடம் பல தடுமாற்றங்கள்
ஏற்பட்டுள்ளது. இத்தடுமாற்றங்கள் இவரது நிலைபாடு தவறு என்பதை தெள்ளத் தெளிவாக
எடுத்துரைக்கின்றது.
தாடியை வெட்டக் கூடாது என்று கூறிய இவர் அதை எவ்வளவு நீளமாக வைக்க வேண்டும்
என்பதற்கு எந்த அளவையும் முறைப்படி இவரால் கூற முடியவில்லை. எனவே இவ்விஷயத்தில்
இவரிடம் பல முரண்பாடுகள் வந்துள்ளது. இவர் கூறிய பின்வரும் வாசகத்தை
கவனியுங்கள்.
எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது
அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம்.
மேற்கண்ட இவரது கூற்றுப்படி தரையைத் தொடும் அளவுக்கு தாடி வளர்ந்தாலே
நிர்பந்தம். அப்போது மட்டுமே தாடியை வெட்டுவதற்கு அனுமதி உண்டு. நெஞ்சு வரை
தாடி வளர்ந்தாலோ இடுப்பு வரை தாடி வளர்ந்தாலோ முட்டி வரை தாடி வளர்ந்தாலோ ஏன்
கரண்டைக்கால் வரை தாடி வளர்ந்தாலோ அது நிர்பந்தம் இல்லை. அதை வெட்டவும் கூடாது
என்று இவர் கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைக் கவனியுங்கள்.
தாடி என்றால் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல்
விளங்கியது கூட குர்ஆன் ஹதீஸ் பேசும் இந்த மேதைக்கு விளங்கவில்லை.
அயோக்கியன் அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்கு இவர் சென்றிருப்பது
மிகவும் கேவலமான செயல். தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என
அபூ ஜஹ்ல் விளங்கி இருந்தானாம்? அபூ ஜஹ்ல் இவ்வாறு விளங்கித் தான் பிடிக்கும்
அளவுக்கு தாடி வைத்தான் என்பதை இவர் எப்படி அறிந்து கொண்டார்?
அவன் வடிகட்டிய காஃபிராகவும் நரகவாதியாகவும் இருக்கும் போது அவனுடன் தூய
நபிவழியை இவர் இணைத்து பேசுவதும் மதுரை ஆதீனம் நபி (ஸல்) அவர்களை அயோக்கியன்
சங்கராச்சாரியாருடன் இணைத்து பேசியதும் ஒன்றே.
இவர் தனது வாதத்தை நிலைநாட்ட கேடுகெட்டவனையெல்லாம் முன்மாதிரியாக
எடுத்துக்காட்ட தயங்க மாட்டார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள
முடிகிறது.
அத்துடன் இங்கே தாடி என்றால் அது பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று
தாடிக்கு ஒரு அளவை கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைப் பாருங்கள்.
நபித்தோழர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று
தேடும் அளவுக்குத் தாடி வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேற்கண்ட இவரது கூற்றைப் பாருங்கள். முகத்தில் தாடி இருக்கிறது என்று அறிந்து
கொள்ளும் அளவுக்குத் தாடி இருக்க வேண்டும் என வாதிடுகிறார்.
தரையில் படும் வரை தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில் ஒரு
பிடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில் பார்த்தால் தாடி
தெரியும் அளவிற்கு தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அரைகுறை மதியுடன் ஆய்வு செய்யப் புறப்பட்டவரின் நிலை இப்படித் தான் இருக்கும்
என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக ஆகிவிட்டார்.
 ஆய்வின் சுருக்கம்
தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்துக்காகவே தாடியை வளர விடுங்கள் என்ற
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாடியை ஒட்ட வெட்டாமல் கூடுதலாக வைக்க வேண்டும்
என்பதே தாடியை வளரவிடுங்கள் என்ற கட்டளையின் கருத்து. எனவே தாடியை வெட்டுவதற்கு
மார்க்கத்தில் தடையில்லை.
தாடி இவ்வளவு அளவு கூடுதலாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எந்த
எல்லையும் இடவில்லை. அவர்கள் இதற்கு எந்த அளவையும் கூறாமல் விட்டிருப்பதால்
நாமும் இதற்கு எந்த அளவையும் கூறக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய
முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு
விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள்
இறைத்தூதர்கடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு
கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால்
அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான்
கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்<
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 7288
தனது தாடியை எவ்வளவு நீளமாக வைக்கலாம் என்பதை அவரவரே முடிவு செய்து கொள்ள
வேண்டும். ஆனால் தாடியை ஒட்ட நறுக்கி அதை அகற்றியது போன்ற தோற்றத்தை
ஏற்படுத்திவிடக் கூடாது
அல்லாஹ் மிக அறிந்தவன்
source:  http://www.google.com/url?sa=D&q=http://onlinepj.com/aayvukal/dadi_or_ayvu/