Thursday, February 10, 2011

Al quran , Surah Hashr - 59 - 17

فَكَانَ عَاقِبَتَهُمَا أَنَّهُمَا فِي النَّارِ خَالِدَيْنِ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَاءُ الظَّالِمِينَ ﴿١٧


அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள், ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான், அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள். (19)
Publish Post

அழைப்புப்பணி நம் அனைவருக்கும் கடமையான பொறுப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரகுமா துல்லாஹி வ பரகாதுஹு,,



தங்களது தாயகத்தை விட்டு விட்டு அந்நிய பூமியில் வசிக்கக் கூடிய முஸ்லிம்கள்,
தற்பொழுதுள்ள கால கட்டத்தில் இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடிய முஸ்லிம்களாக
தங்களை சொல்லாலும், செயலாலும் மாற்றிக் கொள்வது அவசியமானதொன்றாகும்.


ஏனெனில், இன்றைய மேலை நாட்டுச் சமூகம் இதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை விட்டு
விட்டு உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்காக ஒரு ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கும் பொழுது, நீங்களும், உங்களது பழக்க வழக்கங்களும், பண்பாடுகளும்
இஸ்லாத்திற்குச் சான்று பகர வேண்டுமே ஒழிய, இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை
ஏற்படுத்தி விடக் கூடாது. இதற்கான காரணம் மிகவும் பாரதூரமானது. பல புதிய
சகோதரர்களிடம் உங்களை இஸ்லாத்தில் கவர்ந்த அம்சம் எது என்று கேட்கும் பொழுது,
பலர் தங்களுடன் பழகும் நபர்கள் மூலமாக, அதைப் போலவே வணக்க வழிபாடுகள் மூலமாக
ஈர்க்கப்பட்டதாக விளக்கமளித்திருக்கின்றார்கள்.


எனவே, பெரும்பான்மை சமூகத்தில் சிறுபான்மையினராக வாழக் கூடிய முஸ்லிம்கள்
இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடியவர்கள் தங்களது நடத்தைகளை மாற்றிக் கொள்வதே
ஒரு மிகப் பெரிய அழைப்புப் பணியாகும்.


சில அறிவுரைகள்


உங்களது சொல்லும் செயலும் இறைவனுக்கு அடிபணிந்து இருக்கட்டும். உங்களது
செயல்பாடுகள் எப்பொழுது இறைவனையும் அவனது தண்டனையையும் ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்கட்டும். இதன் மூலம் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தையும் பிற
சமூக பழக்கவழக்கங்களின் பாதிப்பிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மற்ற
கலாச்சாரங்களுக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன
என்பதையும், மற்ற கலாச்சாரங்களினால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் தன்னுடைய
குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறுவது அவசியமாகும்.


ஷரீஆ அங்கீகரிக்காத எந்தவொரு வணக்க வழிபாடுகள், பழக்க வழக்கங்களை சற்றும்
அனுமதிக்கக் கூடாது. இதற்கு ஷரீஅத் அனுமதித்த மற்றும் அனுமதி வழங்காத அம்சங்கள்
பற்றிய தெளிந்த அறிவு இருப்பது அவசியமாகும். இன்னும் பிக்ஹு போன்ற இஸ்லாமிய
மார்க்கத்தின் அடிப்படைச் சட்டங்கள் (ஒளு, குளிப்பு, தொழுகை, நோன்பு, ஜகாத்,
ஹஜ்.. இன்னும்) போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவும், தகுந்த
சந்தர்ப்பங்களில் இவற்றைக் கையாண்டு, சிறு உரைகள் வழங்கக் கூடிய திறமையும்
பெற்றிருத்தல் அவசியமாகும்.


திருமறைக் குர்ஆனை தெளிவாக ஓதக் கூடிய மற்றும் அதன் சில வசனங்களுக்காகவாவது
பொருளுடன் விளக்கமளிப்பதற்கு தங்களை பயிற்று வித்துக் கொள்ள வேண்டியது
அவசியமாகும்.


சமூகத்தில் உள்ளவர்களை ஒர் அணியில் நின்று, கூட்டுத் தொழுகை (ஜமாத்)
நிறைவேற்றுவதற்கு தூண்டிக் கொள்ள வேண்டும்.


இஸ்லாத்தின் அனைத்துச்செய்திகளும் அனைவருக்கும் பொதுவானவை, அனைத்து
மக்களுக்கும் அருளப்பட்டவை என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்வதோடு, இது நமக்கு
மட்டும் அருளப்பட்ட மார்க்கம் என்ற சுயநலத்தைக் கைவிட்டு, இஸ்லாமியச் செய்திகள்
அடையாத உள்ளங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.


இன்றைய சூழ்நிலையில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் பற்றி தெளிவான விளக்கத்தை
மாற்றுமத நண்பர்களுக்கு வழங்க வேண்டியது, முஸ்லிம்களின் மீதுள்ள கடமையாகும்.
இன்றைக்கு மாற்றுமத நண்பர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி தவறான அறிமுகம்
செய்யப்பட்டு, அவர்களது உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக புரிந்துணர்வு
நிறைந்து கிடக்கின்றது. அவற்றை உரிய முறையில் விளக்கமளித்துக் களைய வேண்டியது,
அவர்களைச் சுற்றி உள்ள முஸ்லிம்களின் மீதான கடமையாகும்.


என்னைப் பற்றி ஒரு செய்தி தெரிந்திருந்தாலும் அதைப் பிறருக்கு எத்திவையுங்கள்.
நீஙகள் பனூ இஸ்ரேவலர்களைப் பற்றி பேசுவது குற்றமில்லை. எவர் என் மீது
வேண்டுமென்று பொய்யுரைப்பாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகில் ஆக்கிக்
கொள்ளட்டும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம்: புஹாரி ‘(நபியே!) உம் இறைவனின்
பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர்
அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!
மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச்
சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அந்நஹ்ல் 16: 125).
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும்
ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாரயங்
கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ்
அனுப்பினான்), மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், பேரறிவாளனாகவும்
இருக்கின்றான்.” (4: 165).


காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக்
கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும்
ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).”
(அல் அஸ்ர் 103: 1-3).
--
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள்
இருக்கிறீர்கள், (ஏனெனில்) நீங்கள் நல்லதைச்செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும்
விலக்குகிறீர்கள், இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்,
வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது)
அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கைகொண்டோராயும்
இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறைக்கட்டளையை மீறும்) பாவிகளாகவே
இருக்கின்றனர்.” (ஆலு இம்ரான் 3: 110).


‘(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும், நான்
அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன், நானும் என்னைப் பின்பற்றியவர்களும்
தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், ஆகவே,
அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.” (யூசுப் 12: 108).


‎4838. அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்
'(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று
பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு
அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அன...ுப்பியிருக்கிறோம்' எனும் இந்த
(திருக்குர்ஆன் 48:8 வது) குர்ஆன் வசனத்தையே 'தவ்ராத்' வேதத்தில் (இறைவன்)
பின்வருமாறு கூறினான்:
'நபியே! நிச்சயமாக, நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி
அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத
பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீங்கள் என் அடியாரும்
என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர்
('முத்தவக்கில்') என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம்
கூறுவோம்.)
(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ,
கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு
இன்னொரு தீமையினால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்துவிட்டு விடுவார்.
வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரின் உயிரைக்
கைப்பற்றமாட்டான். மக்கள் 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று
கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும்,
செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.
Volume :5 Book :65


எனக்கு முன்னர் உள்ள சமுதாயங்களில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கும், அவர்களது
சமூகத்திலிருந்து (ஹவாரிய்யூன்கள்) தோழர்கள் இருந்தனர். அந்தத் தோழர்கள் அவரது
வழிமுறைகளை பின்பற்றுவர், அவரது கட்டளையை நடைமுறைப்படுத்துவர். அவர்களுக்குப்
பின் சமூகங்கள்,... அவர்களைத் தொடர்ந்து சமூகங்கள் வந்தன, அவர்கள் செய்யாதவற்றை
அந்த சமூகங்கள் சொல்ல ஆரம்பித்தன, அவர்கள் சொல்லாதவற்றை செய்ய ஆரம்பித்தனர்.
இப்படிப்பட்டவர்களுடன் யார் தனது கரத்தால் போரிடுவாரோ அவர் முஃமினாவார்,
அவர்களுடன் தனது நாவால் போரிடுபவர் முஃமினாவார், அவர்களுடன் தனது உள்ளத்தால்
போரிடுபவர் முஃமினாவார், இதற்குப் பின் ஈமானில் தாணிய வித்தளவவாது இல்லை” என
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு
மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்).


நிச்சயமாக மார்க்கம் (இஸ்லாம்) பரதேசமான முறையில் ஆரம்பித்தது, அதே நிலையை
மறுபடியும் அடையும். பரதேசிகளுக்கு சுப சோபனம் உண்டாகட்டுமாக! அவர்கள் யாரெனில்
எனக்குப் பின் எனது வழிமுறைகளை விட்டும் சீர்கெட்டு இருந்தவர்களை
சீராக்குபவர்கள் தான் அவர்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னு மில்ஹா தனது தந்தை, பாட்டன் வழியாக அறிவிக்கின்றார். திர்மிதி).


அல்லாஹ்வின் மீது சத்தியமாக (அலியே!) உன் மூலம் ஒருவருக்கு நேர்வழி கிடைப்பது
என்பது செவ்வகை ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள். புஹாரி).


மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். தப்பு
செய்யும் போது நடுநிலையில் சிந்திக்கும் ஆற்றலை மனிதனுக்கு அல்லாஹ்
கொடுத்துள்ளான் .மனிதனை நேரான பாதையில் பயணிக்க அழைப்புப்பணி இன்றியமையாதது .
“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதா யத்தில்) சிறந்த சமுதாயமாக
நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்,
தீயதைவிட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மீது திடமாக நம்பிக்கை
கொள்கிறீர்கள்…” (3: ௧௧௦
மனிதன் தப்பு பண்ணும்போது அதை தடுக்கா விட்டால் அல்லாஹ்வின் தண்டனை எல்லோரையும்
பாதிக்கும் .


அழைப்புப்பணி அவசியமான பணியாகும். அத...ு மார்க்கக் கடமை மட்டுமல்ல, இம்மையில்
தவறுகளின் தீங்குகளிலிருந்து நம்மையும் , மனித சமூகத்தையும் காக்கும்
பணியாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப
இப்பணியில் பங்கேற்க வேண்டும். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க
வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமையில் பயன் பெறலாம்

அழைப்புப்பணி நம் அனைவருக்கும் கடமையான பொறுப்பு


ஜஸாக்கல்லாஹு ஹைரன்.

Sunday, February 6, 2011

தாடி வைப்பது கேவலமா ...முஸ்லிம் மக்களே சிந்தியுங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட
நறுக்குங்கள்.*

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு
வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.*

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 435

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மஜூசிகளைப் பற்றி கூறப்பட்ட போது *

*மஜூசிகள் தங்களது மீசைகளை அதிகமாக வைக்கிறார்கள். தாடிகளை மழிக்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.*

நூல் : இப்னி ஹிப்பான்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேதமுடையவர்கள் அதாவது யூதர்களும் கிரிஸ்தவர்களும்
தங்களது தாடிகளை (மழிக்காமல்) ஒட்ட வெட்டி வந்தனர். இவர்கள் தாடியை விட மீசையை
அதிகமாக வளர்த்தார்கள். இதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நூல் : அஹ்மது

  முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக்
கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர்.
இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி
வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ்
வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது.

மாடர்ன் முஸ்லிம்கள்(?) சிலர் “தாடி என்பது அரபியர்களின் வழக்கம், அந்த
அடிப்படையை ஒட்டியே நபியவர்கள் தாடி வைத்திருந்தனர்” அதை நாம் பின்பற்ற
வேண்டியதில்லை என்று கூறத் துவங்கியுள்ளனர். தாடி என்பது அரபியர்களின் வழக்கம்
என்பதும் உண்மையே! அபூ ஜஹ்ல் உட்பட பல அரபியர்கள் தாடி வைத்திருந்தனர்.

“மக்கத்துக் காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல், பத்ரு போர்க் களத்தில்
வெட்டப்பட்டுக் கிடக்கும் போது, இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள், அபூஜஹ்லின்
தாடியைப் பிடித்துக் கொண்டு “நீதான் அபூஜஹ்லா” என்று கேட்டனர். அறிவிப்பவர்:
அனஸ்(ரழி), நூல் : முஸ்லிம்

இதை சிலர் “தாடி அரபிகளின் வழக்கம்” என்று கூறி முழுக்கச் சிரைத்து
விடுகின்றனர். “நாட்டு வழக்கம்” என்ற அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் ஒன்றைச் செய்தால் அதை நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
நபியவர்கள் கோதுமை உணவு உண்டார்கள் என்பதற்காக, நாமும் கோதுமை உண்வு தான்
உண்ண வேண்டுமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.

“நாட்டு வழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை” என்பது உண்மைதான் என்றாலும், ஒரு
வழக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திக் கட்டளை இட்டு
விட்டால் அது மார்க்கத்தின் சட்டமாக ஆகி விடும். அதை நாம் பின்பற்றியே ஆக
வேண்டும்.

கோதுமை உணவைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீங்களும் கோதுமை
உண்ணுங்கள்!” என்று நமக்குத் கட்டளையிடவில்லை. ஆனால் தாடியை நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அது பற்றிய ஹதீஸ்களை
முதலில் நாம் பார்ப்போம்.

“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி) அறிவிப்பவர் : இப்னு
உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ

“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)

“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)

“அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்’ மீசையை(ப் பெரிதாக)
வளர்க்கின்றனர்” என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்
கேட்டபோது, “நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்!
யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு நூல் : அஹ்மத்

தாடியை வலியுறுத்தி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவு மிகவும்
தெளிவாக உள்ளது. இதில் மாற்றுக் கருத்துக் கொள்ள அறவே இடமில்லை.

மேற்கூறிய நபிமொமிகளை அடிப்படையாகக் கொண்டு, அறிஞர்களில் சிலர் “தாடியை
சிறிதளவும் குறைக்கக் கூடாது” என்று கருதுகின்றனர். இன்னும் சில அறிஞர்கள்
குறைத்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். இரண்டாவது தரப்பினரின் கருத்தே
சரியானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

“இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ், உம்ராச் செய்யும் போது, தங்கள்
தாடியிலிருந்தும், மீசையிலிருந்தும் (சிறிது) குறைத்துக் கொள்வார்கள்”
அறிவிப்பவர் : நாபிவு(ரழி) நூல்கள் : புகாரி, முஅத்தா

“இப்னு உமர் (ரழி) அவர்கள் தன் தாடியில் ஒரு பிடிக்கு மேல் உள்ளதை நீக்கக்
கண்டேன்” என்று மர்வான்(ரழி) அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூது)

இப்னு உமர் (ரழி) அவர்களின் இந்தச் செயல், தாடியைக் குறைக்கலாம் என்பதற்குத்
தெளிவான ஆதாரமாகும். இப்னு உமர்(ரழி) அவர்கள், ஸஹாபாக்களின்
வித்தியாசமானவர்கள். நபி(ஸல்) அவர்களின் எல்லாச் செயல்களையும் அப்படியே
பின்பற்றக் கூடியவர்கள். நபி(ஸல்) அவர்களின் தற்செயலான காரியங்களையும் கூட
அவர்கள் பின்பற்றக் கூடியவர்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்திலாவது தன்
ஒட்டகத்தை சிறிது நேரம் நிறுத்தினால் – அந்த இடத்திற்கு அவர்கள் செல்ல
நேர்ந்தால் – அந்த இடத்தில் தனது ஒட்டகத்தை நிறுத்துவார்கள். இது போன்ற
காரியங்களில் எல்லாம் நாம் அப்படியே செய்ய வேண்டியதில்லை. எனினும், இப்னு
உமர்(ரழி) அவர்கள் இது போன்ற செயல்களையும் அப்படியே பின் பற்றியவர்கள்.

அவர்கள் தங்களின் தாடியைக் குறைத்திருந்தால், நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி
இன்றி நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். ‘தாடியை விட்டு
விடுங்கள் என்ற ஹதீஸ் இப்னு உமர்(ரழி) அவர்களுக்கு தெரியாமலிருக்கலாம் என்றும்
கருத முடியாது, அந்த ஹதீஸை அறிவிப்பதே இப்னு உமர்(ரழி) அவர்கள் தான். ஹதீஸை
அறிவிக்கக் கூடிய இப்னு உமர்(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளார்கள்
என்றால், குறைக்கலாம் என்பதற்கு சரியான ஆதாரமாகும்’.

“தாடியை விட்டு விடுங்கள்! என்ற இன்னொரு ஹதீஸை அபூ ஹுரைரா(ரழி) அவர்களும்
அறிவிக்கிறார்கள். அந்த ஹதீஸை அறிவிக்கின்ற அபூஹுரைரா(ரழி) அவர்களே தன்
தாடியைக் குறைத்துள்ளனர் என்று இமாம் நவபீ(ரஹ்) அவர்கள் ‘ஷரஹுல்’ முஹத்தப் என்ற
நூலில் குறிப்பிடுகிறார்கள்.

“நபி(ஸல்) அவர்கள் தனது தாடியை நீளத்திலும், அகலத்திலும் குறைப்பார்கள்” என்று
திர்மிதீயில் ஒரு ஹதீஸ் உள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் இடம் பெறுகின்ற உமர்
இப்னு ஹாரூன் என்பவர் பலவீனமானவர் என்று பல ஹதீஸ்கலை வல்லுனர்கள் கருதுவதால்.
அது ஆதாரமாகாது, எனினும் உமர் இப்னு ஹாரூன் இன்றி ‘உஸாமா’ என்பவர் மூலமும் இந்த
ஹதீஸ் அறிவிக்கப்படுகின்றது என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் ‘மீஸானில்’
குறிப்பிடுகிறார்கள். அந்த அடிப்படையில், நபி(ஸல்) அவர்கள் தாடியைக்
குறைத்திருக்கிறார்கள் என்று அறிய முடிகின்றது. அதைப் பார்த்தே இப்னு உமர்(ரழி)
அவர்களும் தம் தாடியைக் குறைத்திருப்பார்கள் என்று அனுமானிக்கலாம்.

ஸாலிம் இப்னு அப்துல்லா(ரழி) அவர்கள், இஹ்ராம் கட்டுவதற்கு முன், தனது தாடியில்
சிறிது குறைத்துள்ளார்கள் என்ற செய்தியை இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தனது
முஅத்தாவில் பதிவு செய்துள்ளனர்.

தாடி வைப்பது சுன்னத்தாகும் என்பதை சிலர் தவறாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.
தாடியை விரும்பினால் வைக்கலாம், இல்லாவிட்டால் வைக்காமல் இருக்கலாம் என சிலர்
விளங்கியிருக்கின்றார்கள்.

தாடியை வளர விடுங்கள் என்பது ரசூல் (ஸல்) அவர்களின் ஏவலாகும். எனவே த...ாடி
வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து, “தாடியை விட்டு விடுங்கள்!” என்ற நபிமொழியின்
கருத்து “சிரைக்கக் கூடாது” என்பது தான் என்று தெளிவாக உணரலாம்.

கன்னத்தைக் சிரைத்துக் விட்டுத் தாழ்வாயில் மட்டும் முடிகளை விட்டுவிட்டு,
அதைத் தாடி என்று சிலர் கருதுகின்றனர். “கன்னம், தாழ்வாய்” இரண்டும் சேர்ந்தே
தாடி எனப்படும். இதில் ஒரு பகுதியைச் சிரைத்தாலும், தாடியைச் சிரைத்ததாகவே
கருதப்படும். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கிய தாடியை வைத்து, நபி வழியில்
நடப்போமாக – ஆமீன்