Sunday, December 11, 2011

ஹஜ் அனுபவங்கள், உங்கள் சிந்தனைக்கு ...

ஏக இறைவன் வல்ல ரப்புல் ஆலமீனின் திருப்பெயரால்  ...
அஸ்ஸலாமு அலைக்கும்...

நம்மில் சிலர் ஹஜ்ஜை பிரைவேட் டிராவல் மூலமோ அல்லது ஹஜ் கமிட்டி மூலமோ செல்வோம்.

இதில் பிரைவேட் டிராவல் மூலம் செல்வோரின் இடையூறை குறிப்பிட விரும்புகிறேன். இன்சா அல்லாஹ் தங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்

* இதில் நான் சென்ற டிராவல்ஸ் பற்றி மட்டும் அல்ல, பொதுவான பிரைவேட்  டிராவல் எடுத்து செல்லும் ஹஜ்ஜில் நடக்கும் சம்பவங்கள் .

- நீங்கள் GroupA ல சென்றாலும், GroupB / C,  ல  சென்றாலும், அவர்கள் ஹஜ் முடியும் வரை குறிப்பிட்ட 5 star or 7 star ஹோட்டலில் தங்க வைக்க மாட்டார்கள். மாறாக அஜிசியா என்ற இடத்தில் (minimum 5 - 8KM from Haram Sheriff) தான் நம்மை தங்க வைப்பார்கள். இந்த விபரத்தை, அவர்களின் notice இல்  இருக்காது. ஆக தாங்கள் தொழுகைக்கு ஹரத்திற்கு செல்ல அதிகம் அதிகம் taxi இல் தான் செல்லவேண்டும். அதற்கு 20 ரியால் முதல் 200ரியால்  வரை  ஒருவருக்கு கேட்பார்கள்.

- 7 ம் நாள் இரவே தங்களை இஹ்ராம் அணிந்து அஜிசியா ரூம் லேயே  தூங்க சொல்வார்கள். மினாவிற்கு செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணி முதல் காலை எந்த நேரத்திற்கும் வரலாம்.
(8 ம் நாள் பஜர் தொழுது விட்டு சூரியம் உதயத்திற்கு  முன் செல்வது நபி வழியாகும், ஆனால் மக்கள் நெருக்கடி காரணமாக இப்பிடி ஒரு ஏற்பாடு செய்கிறார்கள்).

- மினா டெண்டில் 100 பேர் ஒருக்களித்து படுக்க கூடிய இடத்தில் 150 பேரை அடைப்பார்கள். இடம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஹஜ் நிறைவேட்டிட நாம் சகித்து கொள்வோம். ஆனால் அவர்கள் தெரிந்தே கடைசியில் தன் லாபத்திற்காக அதிகமான நபர்களை சேர்கிறார்கள்.

(* மேலும் அதில் A/C வேலை செய்யாது, பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் நிர்வாகம் தங்கி உள்ள டெண்டு மட்டும் நல்ல குளுமையாக இருக்கும் )

 - மினாவில் பஜர் தொழுது விட்டு சூரியம் உதயத்திற்கு முன் செல்வது நபி வழியாகும், ஆனால் மக்கள் நெருக்கடி காரணமாக முதல் நாள் இரவே மினாவிளுருந்து கிளம்பனும் . அதேபோல் மினாவில் இருந்து செல்ல வேண்டிய பஸ் மேலே குறிப்பிட்டது போல் மிக மிக கால தாமதமாகும்.

- அல்ஹம்துலில்லாஹ் அரபாவிர்க்கு பஜருக்கு சில மணித்துளிகள் முன் வந்துவிடலாம்.

- அரபாவில் சூரியன் அடி சாய்ததும் முஜ்தலிபா விற்கு செல்லவேண்டிய பஸ், இரவு 10 - 11 - 12  மணி ஆகலாம். அப்படி கிளம்பினதும் சிறிய தூரம் சென்றதும் பஸ் traffic காரணமாக நின்றுவிடும். பின்பு எப்போது கிளம்பும் என்றால் அடுத்த நாள் ஆகிவிடும். முஜ்தலிபா உள்ள  கடமை நிறைவேறாமல் போய்விடும் .

* இதை அவர்கள், கொஞ்சம் முன்பே கிளம்பலாம் அல்லது, இதன் விபரத்தை எல்லோரிடமும் சொல்லி, அவரவர்கள் நடந்து செல்ல சொல்லலாம். இதனால் முக்கியமான   முஜ்தலிபாவில் தங்கி பஜர் தொழுகை நிரவேட்ட்ற வேண்டிய கடமை தவறி விடுகிறது. பலகீனர்கள் அல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களும் இந்த கடமை முடியாமல் ஹஜ் சென்று வருகிறார்கள்.
பலர் நடக்கும் காட்சி


- பின்பு மினாவிற்கு வந்ததும், சிறிய கற்களை கொண்டு சைத்தாணிற்கு கல் எரிய அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்லவேண்டும் என அடம் பிடிப்பார்கள். பலகீனர்களுக்கு உள்ள சலுகையை நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களையும் அதே போல் செய்ய சொல்வார்கள்.


- அடுத்து குர்பானி : இதில் அவர்கள் நாங்கள் குர்பானி குடுக்கிறோம் என்று குறைந்த விலையில் மினாவிற்கு தொலைவில் சென்று எங்கோ போய் குடுப்பார்கள்.
அல்குரான் 2:196 = அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்.
 
இதில் மினாவில் குடுக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தும், அவர்கள், 8KM தொலைவில் குடுக்கிறார்கள். அதற்கு பதில் சவுதி கோவேர்மென்ட் ஏற்பாடு செய்த பேங்க் மூலம் குடுத்தால் , அவர்கள் நாட்கள் தள்ளி போனாலும் குர்பானி குடுக்கும் இடத்திலேயே குடுப்பார்கள்.

- பின்பு தலை முடியும் இஹ்ரமும் களைந்து விட்டு , "தவாப் al இபாலா " செய்ய வேண்டும். இதை அவர்கள் சொல்ல மாட்டார்கள், நாம் தான் முயற்சி எடுத்து ஹரத்திற்கு செல்ல வேண்டும். பலகீனமானவர்கள் இத்தெய் செய்யாமலே விட்டு விடுகின்றனர் காரணம் நிர்வாகம் சொல்லவும் இல்லை, இவர்கலுக்கும் அதை பற்றிய தகவலும் இல்லை.

- பின்பு மினா டெண்டிர்ற்கு வந்து தங்கி விடவேண்டும்.

- ஹஜ்ஜினுடைய நாட்கள் கழித்து இப்போவாவது ஹரத்திற்கு அருகில் உள்ள ஏற்கனவே குறிப்பிட்ட ஹோட்டலுக்கு அனுப்ப மாட்டார்கள், இன்னும் ஒருநாள் அஜீஜியா வில் தங்க வைப்பார்கள் . ஆகவே, தாங்கள் செல்லும் நாட்களில் அதிகமதிகம் ஹரத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள் குறைந்து விடும். மாறாக டாக்ஸி செலவு கணக்கு பார்க்காதவர்களை தவிர.

ஹஜ் வழிகாட்டியின் வழிகேடு :
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்;

- தாங்கள் ஹஜ் பற்றிய தகவல் இல்லாமல் சென்றால் , அங்கு தங்களை வழி தவற பல வழிகள் உண்டாகும்

- அல்குரான் : ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (2:196)
ஆனால் அவர்கள் இரண்டாம் உம்ராவை நம் நபி சள்ளலாஹு அலைஹிவசள்ளம் பெயரில் செய்ய சொல்வார்கள் .

அல்குரான் 2: 199)பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. 
-  மாறாக அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சொல்லாத சுன்னத்து தொழுகை மினாவிலும் அரபாவிலும் தொழுவார்கள்.
- திக்ரு என்ற பெயரில் "அஹு" , "இல்லலா" சொல்லி தருவார்கள்

இன்னும் தவறான ஹதீசுகளை சொல்லி தருவார்கள். உதாரணம்: நபி இபுராஹீம் (அலை) கோபத்தால் தன் மகனை அறுக்க வேண்டிய கத்தி அருக்காதளால்  கத்தியை தூக்கி எறிந்தார்கள், அருகில் இருந்த மலை இரண்டாக பிளந்தது என்று ..!!!!

Al Quran (As Saffat)
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." (102)
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது (103)
நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம். (104)
"திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். (105)
"நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்." (106)
ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம். (107)

இன்னும் அல்லாஹ் நல்லடியார் இன்று சொன்ன நபி இபுராஹீம் (அலை) அவர்களை கோபக்காரர் போல் சித்தரிப்பது எப்படி சரி ஆகும் ?
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (37:111)

இப்படி நிறைய உண்டு =>
=====

இதில் ஹஜ் committee சிறந்தது அல்லது மற்ற private travels சிறந்தது என்று சொல்லவில்லை, தாங்கள் எதில் சென்றாலும் நன்றாக ஹஜ்ஜினுடைய காரியங்களை நன்கு தெரிந்து விட்டு அதற்கு ஏற்ற உடம்பை தயார் படித்திவிட்டு செல்லுங்கள்.

டிராவல்ஸ் யை குறை சொல்லி ஒன்னும் புரயோஜனமில்லை. காரணம் அவரகளுக்கு அது வியாபாரம், நமக்கு இது நம் வாழ் நாளின் ஒரே ஒரு முறை நடக்கும் அல்லாஹ்வுக்காக உள்ள கடமை மற்றும் இபாதத்.
  
இறுதி கடமை என்பதனால் இறுதி காலத்து கடமை என்று சென்றால், நீங்கள் ஹஜ்ஜை காணத்தான் முடியும் செய்ய முடியாது.
குறைந்தது 25KM நடக்க தங்களை தயார் படித்தி கொள்ளுங்கள் .

அல்லாஹ் ஒருவனே முற்றிலும் அறிந்தவன் ..இதில் குறை இருப்பின் தெரியபடுத்தவும்.

வஸ்ஸலாம்

Sunday, December 4, 2011

25 Duas from the Holy Quran (Arabic - English - Tamil )

                      25 Duas from the Holy Quran
(And when My servants ask thee concerning Me, I am indeed close (to them): I respond to the dua (prayer) of every suppliant when they calleth on Me - Quran 2:186)
என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
 D U A
1. Our Lord! Grant us good in this world and good in the life to come and keep us safe from the torment of the Fire (2:201)

"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
2. Our Lord! Bestow on us endurance and make our foothold sure and give us help against those who reject faith. (2:250)

"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
3. Our Lord! Take us not to task if we forget or fall into error. (2:286)

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!
4. Our Lord! Lay not upon us such a burden as You did lay upon those before us. (2:286)

 எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!
5. Our Lord! Impose not on us that which we have not the strength to bear, grant us forgiveness and have mercy on us. You are our Protector. Help us against those who deny the truth. (2:286)

எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"
6. Our Lord! Let not our hearts deviate from the truth after You have guided us, and bestow upon us mercy from Your grace. Verily You are the Giver of bounties without measure. (3:8)

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)  
7. Our Lord! Forgive us our sins and the lack of moderation in our doings, and make firm our steps and succour us against those who deny the truth. (3:147)

மேலும், "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
8. Our Lord! Whomsoever You shall commit to the Fire, truly You have brought [him] to disgrace, and never will wrongdoers find any helpers (3:192)

"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்;).
9. Our Lord! Behold we have heard a voice calling us unto faith: "Believe in your Lord" and we have believed. (3:193)

"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே!
10. Our Lord! Forgive us our sins and efface our bad deeds and take our souls in the company of the righteous. (3:193)

எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;).
11. Our Lord! And grant us that which you have promised to us by Your messengers and save us from shame on the Day of Judgement. Verily You never fail to fulfill Your promise. (3:194)

எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
12. Our Lord! We have sinned against ourselves, and unless You grant us forgiveness and bestow Your mercy upon us, we shall most certainly be lost! (7:23)

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
13. Our Lord! Place us not among the people who have been guilty of evildoing. (7:47)

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே" என்று கூறுவார்கள்.
14. Our Lord! Lay open the truth between us and our people, for You are the best of all to lay open the truth. (7:89)

"எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்).
15. Our Lord! Pour out on us patience and constancy, and make us die as those who have surrendered themselves unto You. (7:126)

"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.)
16. Our Lord! Make us not a trial for the evildoing folk, and save as by Your mercy from people who deny the truth (10:85-86)

எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள். (85)"

(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்கள்.) (86)
17. Our Lord! You truly know all that we may hide [in our hearts] as well as all that we bring into the open, for nothing whatever, be it on earth or in heaven, remains hidden from Allah (14:38)

"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை."
18. Our Lord! Bestow on us mercy from Your presence and dispose of our affairs for us in the right way. (18:10)

"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்.
19. Our Lord! Grant that our spouses and our offspring be a comfort to our eyes, and give us the grace to lead those who are conscious of You. (25:74)

"எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
20. Our Lord! You embrace all things within Your Grace and Knowledge, forgive those who repent and follow Your path, and ward off from them the punishment of Hell. (40:7)

"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
21. Our Lord! Make them enter the Garden of Eden which You have promised to them, and to the righteous from among their fathers, their wives and their offspring, for verily You are alone the Almighty and the truly Wise. (40:8)

"எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
22. Our Lord! Relieve us of the torment, for we do really believe. (44:12)

"எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்" (எனக் கூறுவர்).
23. Our Lord! Forgive us our sins as well as those of our brethren who proceeded us in faith and let not our hearts entertain any unworthy thoughts or feelings against [any of] those who have believed. Our Lord! You are indeed full of kindness and Most Merciful (59:10)

"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்"
24. Our Lord! In You we have placed our trust, and to You do we turn in repentance, for unto You is the end of all journeys. (60:4)

"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,"
25. Our Lord! Perfect our light for us and forgive us our sins, for verily You have power over all things. (66:8)

"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.