புகை பிடிப்பது மற்றும் அதை விற்பனை செய்தல் ஹராமா ? ஹலாலா ?
அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வ வரகாதுஹு
புகை பிடிப்பதால்
நம் உயிருக்கு கேடு என்பது நாம் வாழும் இந்த நாட்டில் எல்லோருக்கும் தெரியும்.
மேலும் நம் அரசாங்கமும் அதை அதன் அட்டைபெட்டியிலேயே மிக தெளிவாக படம் போட்டு
இருக்கிறார்கள்.
புகை பிடிப்பதினால் உண்டாகும் நோயினால் உயிருக்கு ஆபத்து நிச்சயகம் உண்டாகும் என்பது மருத்துவரின் கருத்து.
புகை பிடிப்பதினால் உண்டாகும் நோயினால் உயிருக்கு ஆபத்து நிச்சயகம் உண்டாகும் என்பது மருத்துவரின் கருத்து.
ஆகையினால் புகை
பிடித்து ஒருவர் நோயிற்று இறந்தால், அது மரணமா? அல்லது தற்கொலையா ?
அப்படி ஒருவர்
இறந்தால், அதை இஸ்லாத்தின் பார்வையில் அவர் சிறு பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லது அதற்குண்டான தண்டனை பெற்று பின்பு அல்லாவின் கருணையால் சுவர்க்கம் செல்வாரா அல்லது தற்கொலையினால் நிரந்தர நரகம்
செல்வாரா ?
அல்லாஹ் தனது
திருமறையில் கூறுகிறான்:
Surah Al Nisa: 29:
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக்
கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர்
மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில்
உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக
இருக்கின்றான். (29)
மேலும் கூறுகிறான்:
Surah al-Baqarah, Ayah 195
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை
செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ்
முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (195)
இனி இந்த கொடிய
நோயினை உண்டாக்க கூடிய “சிகரட்டை” விற்பனை செய்பவரை பற்றி பார்ப்போம்.
உணவு அங்காடியை
ஹலாலா என்று பார்க்கிற நாம் நமது தொழில் வருமானம் ஹலாலான வழியில் பெறுகிறோமா ?
ஒருவர் புகை
பிடித்து அதனால் நோயுற்று இறந்தால் அது தற்கொலை என்ற முறையில் ஹராம் என்றால்,
அதற்கு காரணமான சிகரட்டை விற்பது ஹராம் இல்லையா?
இன்னும் நேரிடையாக சொல்வதானால்,
விஷத்தை விற்பார்களா மூமின்கள்?
நல்லறிவுள்ள
மூமீன்களே சிந்தியுங்கள்!
இதற்கு சான்றாக வல்ல
இறைவன் கூறுவதை பார்ப்போம் ...
Surah Albakara:219:
يَسْأَلُونَكَ
عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ
وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ
وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ 2:219.
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
Surah Ma’ida:90&91:
5:90
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا
الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ
الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:91
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ
بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ
وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ
أَنتُم مُّنتَهُونَ
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
=====================================================================================
ஆகவே இதை விற்பனை
செய்யும் வணிகர்களே, நாம் நம் சமுதாயத்திற்கு நல்ல எடுத்துகாட்டாக வாழ வல்ல இறைவன்
துணை புரிவானாக. நாம் நம் பாவத்தின் நின்று காத்துகொல்வோமாக ..
மேலும் இஸ்லாமையும்
ஈமானையும் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்ட நாம் இது போன்ற ஒரு பாரதூரமான செயல்களில்
இருந்து விலகி இருப்போமாக.
சிங்கப்பூரில் ஒரு
முஸ்லிம் சிகரெட் அல்லது சூதாட்ட பொருட்களான லாட்டரி சீட் விற்க மாட்டார் என்ற என்னத்தை
மாற்று சகோதரர்களுக்கு எடுத்து கூறுவோம்.. இன்ஷா அல்லாஹ் !
ஆமீன்.
நிறைவாக நம்மை
படைத்து பரிபக்குவபடுத்தும் அல்லாஹ்
கூறுவதை நினைவு கூறுவோம்.
Surah Al Ma’ida (5:93)
لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوا وَّآمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ثُمَّ اتَّقَوا وَّآمَنُوا ثُمَّ اتَّقَوا وَّأَحْسَنُوا ۗ وَاللَّـهُ يُحِبُّ الْمُحْسِنِينَ ﴿٩٣﴾
ஈமான் கொண்டு,
நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும்,
ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும்,
(விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும்,
ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு)
அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.