அஸ்ஸலாமு அலைக்கும்,
மற்றும் ஒரு நம்பிக்கையை நாம் சிந்திக்கவிருக்கிறோம்.
வளைதளம் முதல் அனைத்து சாதனங்களிளும் நமது உயிரிலும் மேலான நபி முஹமது(ஸல்)
அவர்கள் ஒரு பருவம் அடைந்திராத பெண்ணை(ஆயிசா) திருமணம் செய்து விட்டதாக
சாடுகின்றனர். இது வருத்தமும், கோபமும் அளித்தாலும் கூட அதில் நாம் சிந்திக்க
தவறிய குற்றமும் அடங்கியுள்ளது என்பதை மறுத்து விட முடியாது.
முதலில் ஹதிஸ் என்ன சொல்லுகிறது என்பதை வைத்து குரானை சிந்திக்கிறோமே தவிர
குரானை வைத்து ஹதிஷ்களை நம்புவது இல்லை. திருமணத்தை பற்றி குரான் என்ன
சொல்லுகிறது என்பதனை பார்த்து விட்டு ஹதிஷ்களில் எதை நம்புவதென்று பார்ப்போம்.
திருமணத்தை குரான் ஒரு உறுதியான் வாக்குறுதி (மீசாக்) என்கிறது. (4:21) .
வாக்குறுதி அல்லது ஒப்பந்தம் என்பது உடல் மற்றும் அறிவு வளர்ச்சி அடைந்த இரு
சாரார் செய்து கொள்வது என்பது தெரிந்த்ததே. இதை மேலும் உறுதி படுத்த அதே சூரா
வில் வரும் 6வது வசனத்தில் தெறிந்து கொள்ளலாம்.
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி)
சோதித்துக் கொண்டிருங்கள் – (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள்
(தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால்
அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; (4:6)
திருமணத்தை பற்றி 7:189, 30: 21 வசனங்களில் மூலமாகவும் நாம் தெரிந்து
கொள்ளலாம்.
குரானை அப்படியே பின்பற்றியவர் முஹமது(ஸல்) அவர்கள்.
இரண்டாவதாக, அன்னை ஆயிசா(ரலி) அவர்களின் வயதை அவரது சகோதரி அஸ்மா(ரலி)
அவர்களின் வயதை வைத்து தெறிந்து கொள்ளலாம். அஸ்மா(ரலி) அவர்கள் ஆயிசா(ரலி)
அவர்களை விட 10 வயது மூத்தவர் ஆவார். வலியதீன் முஹமது அப்துல்லா அல் கதீப் அல்
அம்ரி தப்ரிஸி அவர்கள் மிஸ்காத் என்னும் நூலில் ஹதிஷ்களை அறிவித்தவர்களின்
சுயசரிதையை பதிவு செய்துள்ளார். அதில் அஸ்மா(ரலி) அவர்கள் ஹிஜிரி 73ஆம் ஆண்டு
தனது 100 வயதில் மரணித்தார் என்று பதிவு செய்துள்ளார். இது அவர்களின் மகன்
அப்துல்லா இப்னு ஜுபைர் அவர்கள் சஹீதான பின் 10 அல்லது 12 வருடங்கள் கழித்து
என்றும் பதிவு செய்துள்ளார்.
இஸ்லாமிய வருடம் ஹிஜிரியில் ஆரம்பம் ஆவது அனைவரும் அறிந்ததே. ஆக அஸ்மா(ரலி)
அவர்கள் மரனித்த ஹிஜிரி 73 யை அவரது அப்போதய 100 வயதோடு கழித்தால்,
ஹிஜிரியின் (முஹமது(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்ற ஆண்டு)
போது அவருக்கு 27 வயதாக இருக்கும். ஆக ஆயிசா(ரலி) அவர்களுக்கு அப்போது 17 ஆக
இருக்க வேண்டும்.
முஹமது(ஸல்) அவர்களுக்கும், ஆயிசா(ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்தது
ஹிஜிரிக்கு பின் 2 வருடங்கள் கழித்து ஆகும். அப்படியென்றால் ஆயிசா(ரலி)
அவர்களின் வயது 19 ஆக இருக்க வேண்டுமே தவிர 8, 9 என்று வெவ்வேறு ஹதிஷ்களில்
பதிவானது அல்ல.
அல்லா முற்றிலும் அறிந்தவன்.!