Sunday, January 9, 2011

ஜமாஅத் தொழுகை - கட்டாயம்

பள்ளிவாசலில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால், ஜமாஅத் தொழுகைக்காகப் பள்ளிவாசல் செல்லவேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அது நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களின் வழியின்பால் பட்டதாகும்.

பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகைக்குச் செல்லாதவர் நயவஞ்சகர் எனவும்  அத்தகையவர் நாளை அல்லாஹ்வை முஸ்லிமாகச் சந்திக்க முடியாது எனவும் கீழ்கண்ட நபிமொழிகள் உணர்த்துகின்றன.
*அத்தியாயம்: 5, பாடம்: 5.45, ஹதீஸ் எண்: 1045*
‏ حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ
بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ أَبِي زَائِدَةَ
‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَحْوَصِ
‏ ‏قَالَ ‏

قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَقَدْ رَأَيْتُنَا ‏ ‏وَمَا يَتَخَلَّفُ عَنْ
الصَّلَاةِ إِلَّا مُنَافِقٌ قَدْ عُلِمَ نِفَاقُهُ أَوْ مَرِيضٌ إِنْ كَانَ
الْمَرِيضُ ‏ ‏لَيَمْشِي بَيْنَ رَجُلَيْنِ حَتَّى يَأْتِيَ الصَّلَاةَ وَقَالَ
إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَّمَنَا
سُنَنَ الْهُدَى وَإِنَّ مِنْ سُنَنِ الْهُدَى الصَّلَاةَ فِي الْمَسْجِدِ
الَّذِي يُؤَذَّنُ فِيهِ

நான் பார்த்தவரை நயவஞ்சகம் மூலம் அறியப்பட்ட நயவஞ்சகர்களையும் நோயாளியையும் தவிர வேறெவரும் (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.
நோயாளிகூட இருவரின் கைத்தாங்கலில் (தொங்கியவாறு) நடந்து வந்து தொழுகையில்
சேர்ந்துவிடுவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு நேரிய வழிகளைக்
கற்பித்தார்கள். தொழுகைக்கு அழைக்கப்படும் பள்ளிவாசலில் தொழுவது அத்தகைய
நேர்வழிகளில் ஒன்றாகும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
------------------------------
*அத்தியாயம்: 5, பாடம்: 5.45, ஹதீஸ் எண்: 1046*

‏ حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَضْلُ
بْنُ دُكَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعُمَيْسِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ
الْأَقْمَرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ
‏ ‏مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى
هَؤُلَاءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ ‏

فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ
صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ كَمَا ‏ ‏يُصَلِّي هَذَا الْمُتَخَلِّفُ فِي
بَيْتِهِ لَتَرَكْتُمْ ‏ ‏سُنَّةَ ‏ ‏نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ
نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ وَمَا مِنْ رَجُلٍ يَتَطَهَّرُ فَيُحْسِنُ الطُّهُورَ
ثُمَّ يَعْمِدُ إِلَى مَسْجِدٍ مِنْ هَذِهِ الْمَسَاجِدِ إِلَّا كَتَبَ اللَّهُ
لَهُ بِكُلِّ خَطْوَةٍ ‏ ‏يَخْطُوهَا حَسَنَةً وَيَرْفَعُهُ بِهَا دَرَجَةً
وَيَحُطُّ عَنْهُ بِهَا سَيِّئَةً وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ
عَنْهَا إِلَّا مُنَافِقٌ مَعْلُومُ النِّفَاقِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ
يُؤْتَى بِهِ ‏ ‏يُهَادَى ‏ ‏بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ

நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புபவர், தொழுகைக்கு அழைக்கப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) அவற்றைப் பேணி(த் தொழுது)வரட்டும்.
ஏனெனில்,அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான்.
(கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில்
கலந்துகொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுதுகொள்ளும் இன்னாரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுதுவருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறி விடுவீர்கள்.

அழகிய முறையில் நிறைவுற உளூச் செய்து, பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருபவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.
(எங்களில் நோயாளியான) ஒருவர், இருவரின் கைத்தாங்கலில் தொங்கியவாறு
அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

எனவே எத்தகைய வேலைப்பளு, சூழல்களாக இருந்தாலும் ஐவேளை தொழுகைகளைப் பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழுது வருவதைப் பேணுவோம். இல்லையேல் நாம் நபிவழியைத் தவற விட்டு நயவஞ்சகர்களின் கூட்டத்தில் ஒருவராகி விடுவோம் என்ற
பயம் நம் மனதில் எப்போதும் பசுமையாக இருக்கட்டும். நம்மை முஸ்லிம்களாகவே மறுமையில் எழச் செய்ய அல்லாஹ் கிருபைச் செய்வானாக.

இது எவரையும் புண்படுத்துவதற்காக  அனுப்பப்பட்ட மடலல்ல! மார்க்கமறியாமல், தம் மூளையைச் சுய சிந்தனைக்குக் கொடுக்காமல் தம் தலைவர்களை/இமாம்களைக் கண்மூடிப் பின்பற்றும் மக்கள் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் அதிகரிப்பது மிகப் பரவலாகி விட்டது.  இன்று இறையில்லங்களில்  ஜமாஅத்தாகத் தொழுவதைத் தவிர்ப்பதும்
வீடுகளில் ஐவேளை தொழுகைகளைத் தொழுவதும் சமுதாயத்தில் அதிகமாகி விட்டது.


இதற்குப் பலவிதமான நொண்டி காரணங்களைக் கூறித் தம் செயலை நியாயப்படுத்தவும் ஆரம்பித்து விட்டனர். கூட்டாகப் பள்ளிவாசலில் தொழ வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே, இன்று எனக்குக் காணக்கிடைத்த இந்த ஹதீஸை மற்றவருக்கும் அறியத்தர வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்கும் அனுப்பி வைக்கின்றேன்.
வீடுகளில் தொழுவதை வழக்கமாக்கிக் கொண்டோரும் பள்ளிவாசல்களில் ஜமாஅத் தொழுகைகளைத் தவிர்த்து வருவோரும் பள்ளிவாசலுக்கே செல்லாமல் இருப்போரும் -
இக்கூட்டத்தினரில் ஒருவராவது இந்த மடலை வாசித்துத் தம்மைத் திருத்திக் கொண்டால் அதுவே போதுமானது.

அல்லாஹ் நாடட்டுமாக!

No comments:

Post a Comment