Friday, March 4, 2011

தூய இஸ்லாத்தை முழுமையாக நாம் ஏற்று வாழ்கிறோமா!!! ஒரு சுய பரிசோதனை ?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம் 
 
அஸ்ஸலாமு அழைக்கும் வரகும துல்லாஹி  வா பரகாதுஹு ,

அல்லாஹ்வை நம் அளவுக்கு என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தான் அல்லாஹ்வை நம்புகிறோமே தவிர அல்லாஹ்வை முழுமையாக நம்புகிறோமா ?

உதாரனத்திற்க்கு : ஒருவருக்கு பிள்ளை இல்லை என்றால், அவர் 35 வயசில் துவா கேட்பார்.  மேலும் 40 வயதில்.. இன்னும் கொஞ்ச காலம் சென்று 55 டு 60 வரை அல்லாஹ்விடம் துவா கேட்பார். அதற்கு மேல் முடியாதுன்னு இவரே முடிவெடுத்து துவா கேட்பதை நிறுத்திவிடுவார். 
 -
இந்த வானத்தையும் பூமியையும் நமக்காக படைத்த ரப்புக்கு ஒரு பிள்ளைய தருவதா கடினம்? என்று யாரும் நினைப்பதில்லை.!!
ஜகரிய்யாவுக்கும் இப்ராகிம் நபிக்கு தன் வயது முதிர்ந்த வயதில் தான், அவரின் துவாவினால் அவருக்கு ரப்புல் ஆலமீன் பிள்ளையை குடுத்தான் என்பதை நாம் அறிவோம்.

அவர்(ஜகரிய்யா) கூறினார்; "என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்" என்று கூறினான். (3 :40)

அவன் "குன் பா யகுன்" அவன் அனைத்தையும் "குன்" ஆகுக என்றால் ஆகிவிடும் என்ற நம்பிக்கை எங்கே ?
-
இன்னும் ஒரு வழக்கில் supreme court வரை தீர்ப்பாகி தனக்கு மரண தண்டனை என்றால், அவ்ளவுதான் என்று அல்லாவிடம் துவா கேட்பதை நிறுத்தி விடுவோம். அவனால் முடியாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை எங்கே ?

அதுபோல் சாதாரண வேலையில் இருப்பவன் சொந்தமா company வைக்கணும்னு (halala) துவா கேட்பதில்லை.

உடல் நல குறை மற்றும் நோய் வந்தால் அதற்கேற்ற மருத்துவம் செய்தும் அல்லாவின் கருணை இல்லாமல் அது தீருவதில்லை. அதானால் அவனே அதற்க்கு பொறுப்பானவன். அதனால் எந்த நோயையும் முற்றிலும் தீர்ப்பவன் அவனே !

=>இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.2
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :76

=> இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட
அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய
எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ்
மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ
ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்


அல்லா நம்முடைய்ய கணிப்பிர்கெல்லாம் மேலானவன். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். நாம் கேட்கின்ற ஒவ்வொரு துவாவைய்யும் அவன் தராமல் இருந்ததில்லை என்று நம் இறை தூதர் (ஸல்) சாட்சி கூறுகிறார்கள்.

இதுபோல் பல உதாரணங்கள் நமக்கு தெரியும்,, அப்டி தெரிந்தும் நமக்கு ஒரு கஷ்டம் என்றால் அல்லாஹ்வை முழுமையாக நம்புவதில்லை. 

இன்னும் நபி மூசா (அலை) அவர்கள், தன் கூட்டாதார்களோடு ஊரை விட்டு துரத்தும் போது பின்னால் பிரவ்ன் துரத்தி வருகிறான், முன்னால் கடல் . இனி எப்டி போவது என்று யாருக்கும் தெரியாது. அந்த நேரத்தில் அல்லாஹ்வின் பேரலுளால் கடலையே ரெண்டா பிளந்து அவர்களுக்கு வழி விட்டான்.
(26:62-63)இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது "நிச்சயமாக நாம் பிடிபட்டோம்" என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். (61) அதற்கு (மூஸா), "ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்" என்று கூறினார்;. (26 :62)

மேலும் நம் இறை தூதர் (ஸல்) அவர்கள் தன் உற்ற தோழரான அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களோடு மக்காவை விட்டு சென்று ஒரு குகையில் மறைந்து இருந்தார்கள். அப்போது அபுஜகளின் ஆட்கள் குகையின் மேல் மட்டர்த்திர்க்கு வந்து விட்டார்கள். அவர்களின் கால்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்கு தெரிகிறது. 
அப்போது அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், இறை தூதரே, அவர்கள் வந்து விட்டார்கள், நாம் இரண்டு பேர் தானே இருக்கிறோம் என்றார்கள். அதற்க்கு இறை தூதர் (ஸல்) அவர்கள், இல்லை, மூன்றாவதாக அல்லா இருக்கிறான் என்று நம்பிக்கை ஊட்டினார்கள். அந்த நம்பிக்கை எதிரிகளின் கண்களை மறைத்தது. ஸுப்ஹாநல்லாஹ்   !!!

இந்த முழுமையான நம்பிக்கை நம் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நம் மனதில் இருக்க வேண்டும். அப்டி இல்லை என்பதற்கு நம்மிடமே பல உதாரணங்கள் இருக்கிறது.

1 . ஜும்மாஹ் / பெருநாள் தொழுகை மட்டும் போதுமா  :
- வெள்ளிகிழமை சரியாக ஜும்மாவிற்கு போகிற நாம், அடுத்து அசர் தொழுகையில் ஒரு சப்ஹு கூட நிறைவதில்லை . ஏன் ? ஜும்மாவிற்கு நன்மை தரும் அல்லா அசறுக்கும் மற்ற நேர தொழுகைக்கு தர மாட்டான் என்ற நம்பிக்கையா ?

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 22:77)

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 2:148) 

நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859

2 நோன்பு நேர கட்டுப்பாடு !
- நோன்பு நாட்களில் யாருமே இல்லாத நேரத்திலும் வீட்டில் உணவு இருந்தும், நம்மை அல்லா பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் நாம் பசியை அடக்குகிறோம். அதே அல்லா மற்ற நேரங்களில் / மாதங்களில் பார்ப்பது இல்லையா ?

- அப்படி நினைத்தால் மனிதரை மனிதர் ஏமாற்றுவார்களா? 
- பெண் வீட்டாரின் செலவில் திருமணம் நடத்துவார்களா? 
- அல்லாவும் ரசூலும் ஹராமாக்கப்பட்ட வியாபாரம் செய்வார்களா ? 
- உண்மையை மறைப்பார்களா ? 
- பொய்க்கு துணை போவார்களா ? 
- நாம் வேலை செய்யும் அலுவலகத்திற்கு நாம் நினைக்கும் நேரத்திற்கு செல்வார்களா ? 
- அல்லது fake receipt வைத்து கம்பெனி claim பண்ணுவார்களா ?
- அநாதை சொத்தை அபகரிப்பார்களா ?

*பாகப்பிரிவினை செய்யும்போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள். மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். (அல்குர்ஆன்: 04:08)*
===
இன்னும் நாம் சலாம் கூறுவதில் தயக்கம் மற்றும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பதிலும் தயக்கம்..??

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12 

உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 4760
==
3 தாடி வைப்பதில் என்ன தயக்கம் ?
=> நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.* அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி5892
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு
வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.*

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 435
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மஜூசிகளைப் பற்றி கூறப்பட்ட போது *
*மஜூசிகள் தங்களது மீசைகளை அதிகமாக வைக்கிறார்கள். தாடிகளை மழிக்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.*

நூல் : இப்னி ஹிப்பான்


==
நாம் அனைவரும் தூய இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து, நற்செயல்கள் மூலம் நிறைந்த நன்மைகளை பெற வல்ல இறைவன் அருள் புரிவானாக . ஆமீன் !
நாம் அனைவரும் நல்ல செயல்கள் செய்து நன்மை செய்யும் நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!  ஆமீன் !

இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”  ஆமீன் !
===
 == இன்னும் தொடரும் ...




No comments:

Post a Comment